Home சினிமா செய்திகள் puneeth rajkumar: புனீத்தின் திடீர் மரணத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்: ஏன் தெரியுமா? – people rush to hospitals in karnataka after puneeth rajkumar’s death

puneeth rajkumar: புனீத்தின் திடீர் மரணத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்: ஏன் தெரியுமா? – people rush to hospitals in karnataka after puneeth rajkumar’s death

0
puneeth rajkumar: புனீத்தின் திடீர் மரணத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்: ஏன் தெரியுமா? – people rush to hospitals in karnataka after puneeth rajkumar’s death

[ad_1]

ஹைலைட்ஸ்:

  • மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
  • இதய பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டும் மக்கள்

கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் 29ம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆரோக்கியமாக இருந்த அவர் திடீர் என்று இறந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக்கிற்கே இந்த கதியா என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

புனீத்தின் திடீர் மரணத்தை அடுத்து இளம் வயதினர், நடுத்தர வயதினர் பெங்களூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் எங்கள் இதயம் எப்படி இருக்கிறது என்று பரிசோதனை செய்து சொல்லுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கை ஆகும்.

நாராயண் எனும் 46 வயது நபர் 180 கிலோமீட்டர் பயணம் செய்து பெங்களூருக்கு வந்து இதய பரிசோதனை செய்திருக்கிறார்.

பெங்களூரில் மட்டும் அல்லாமல் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. தீபாவளி பண்டிகை சீசனில் கூட இதய பரிசோதனை செய்து கொள்ள மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள்.

பெங்களூரில் இருக்கும் Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research-ன் டைரக்டர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் கூறியதாவது,

கடந்த 3 நாட்களாக ஏகப்பட்ட பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். தினமும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போம். ஆனால் தற்போது தினமும் 1,800 பேர் வருகிறார்கள் என்றார்.
புனீத் ராஜ்குமார் கண்களால் இன்று உலகை பார்க்கும் 4 பேர்

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here