Home Sports விளையாட்டு செய்திகள் SRH v PBKS: டெட் ரப்பர்தான், அதுக்காக இவ்ளோ மோசமான ஃபீல்டிங்கா? மிரட்டல் சேஸிங் செய்த பஞ்சாப்! | IPL 2022: Livingstone and Brar shine in this dead rubber

SRH v PBKS: டெட் ரப்பர்தான், அதுக்காக இவ்ளோ மோசமான ஃபீல்டிங்கா? மிரட்டல் சேஸிங் செய்த பஞ்சாப்! | IPL 2022: Livingstone and Brar shine in this dead rubber

0
SRH v PBKS: டெட் ரப்பர்தான், அதுக்காக இவ்ளோ மோசமான ஃபீல்டிங்கா? மிரட்டல் சேஸிங் செய்த பஞ்சாப்! | IPL 2022: Livingstone and Brar shine in this dead rubber

[ad_1]

அடுத்த ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் தன் விக்கெட்டை பறி கொடுத்தார் ராகுல். லெக்கில் வந்த பந்தை ஷார்ட் ஃபைன் லெக் பக்கம் ஸ்வீப் அடிக்க முயல, அது அங்கு நின்றுகொண்டிருந்த தவானிடம் சென்று விழுந்தது. என்னடா இது என்பதாக, பேட்டை காற்றில் சுழற்றிக்கொண்டே சென்றார் ராகுல். இனி சுழற்றி என்ன பிரயோசனம் ராகுல்ஜீ! யார் அவுட் ஆனாலும் சிக்ஸ் அடிப்பதை நிறுத்த மாட்டேன் என லிவிங்ஸ்டன் ஓவரில் 89 மீட்டருக்கு ஒரு சிக்ஸை அடித்தார் அபிஷேக். ஆனால், அந்த அபிஷேக்குக்கும், ஒரு பொடி வைத்திருந்தார் பிரார். அவர் வீசிய பந்தை இன்னொரு சிக்ஸாக்க ஓங்கி அடித்தார் அபிஷேக். ஆனால் அங்கு ரெடியாக நின்றுகொண்டிருந்தார் லிவிங்ஸ்டன். தாவிக் குதித்து பின் தரையில் சேஃப்ட்டி லேண்ட் ஆனார். கேட்சும் பிடிக்கப்பட்டது. பூரன், எல்லிஸ் ஓவரில் கீப்பர் கேட்ச் முறையில் வழக்கம் போல பொறுப்பில்லாமல் ஆடி அவுட்டாகி நடையைக் கட்டினார்.

அணியில் இருந்த கடைசி பேட்ஸ்மேனான மார்க்கரமுக்கும் ஐடியா வைத்திருந்தார் பிரார். பந்தை அடிக்க முயன்ற மார்க்கரம் நிலை தடுமாற, அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டம்பிங் செய்தார் கீப்பர். 96 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஹைதராபாத். ஆனால், ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றினார்கள் வாஷிங்டன் சுந்தரும், ஷெபர்டும். எல்லிஸ் ஓவரில் சுந்தர் ஒரு பவுண்டரி அடிக்க, ஷெபர்டு பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அடுத்த ரபாடாவின் ஓவரில், லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் வாஷிங்டன். அடுத்த எல்லிஸின் ஓவரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்தார் ஷெபர்டு. ஆனால், அதே ஓவரில் சுந்தரும், சுசித்தும் அவுட்டாக, நோபாலில் ரன் அவுட்டானார் புவி. அடுத்த வந்த உம்ரான் மாலிக்கை போல்டாக்கினார் எல்லிஸ். ஆனால் அது ஃப்ரீ ஹிட் என்பதால் மாலிக் சேஃப்.

[ad_2]

Source link

sports.vikatan.com

கார்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here