Home Sports விளையாட்டு செய்திகள் Tamil Nadu Local Body Election Thambaram 40th ward voting disturbed for 3 hours | தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது

Tamil Nadu Local Body Election Thambaram 40th ward voting disturbed for 3 hours | தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது

0
Tamil Nadu Local Body Election Thambaram 40th ward voting disturbed for 3 hours | தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது

[ad_1]

சென்னை: சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு வாக்குமையத்தில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அதிகபட்சமாக வாக்குகள் பதிவானதாக காட்டியதால் பரபரப்பு .இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கபட்டது

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  அறை எண் 240ல் மொத்தமாக  1200 உள்ளன.  

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டில் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க | ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது: பாஜகவினரின் எதிப்பால் வாக்குப்பதிவில் பரபரப்பு

இந்த நிலையில் இன்று காலை 216 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 11 மணியளவில் 2,177 வாக்குகள் பதிவானதாக வாக்குப்பதிவு எந்திரத்தில் காட்டியது.

இதனைடுத்து இயந்திர பழுதை சுட்டிக்காட்டி அதிமுக திமுக, பாஜக உள்ளிட்ட  கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்குச் சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எனவே  3மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் இளங்கோவன், இதற்கு இயந்திர கோளாறே காரணம் என்று தெரிவித்தார். உடனடியாக புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் சரி பார்க்கபட்ட பின்னர்  மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது.

மேலும் படிக்க | காலம் மாறுகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது – குஷ்பூ சிறப்புப் பேட்டி

இதனால் வாக்கு மையத்தில் 3 மணி நேரம் வாக்களிக்க இயலாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாயினர்.

இதை தொடர்ந்து பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் சாந்தகுமார், திடிரென வாக்கு இயந்திரத்தில் அதிகபடியான வாக்குகள் காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். வாக்குபதிவு முடிந்த பின்னர் முதலில் கோளாறான வாக்கு இயந்திரத்தில் இருந்து வாக்கு சீட்டுகளை எண்ண வேண்டும் என்று 12 வேட்பாளர்கள் ஒப்புகொண்டனர்.

ஆனால்,  திமுக வேட்பாளர் மட்டும் எண்ணிகைக்கு ஒத்துகொள்ளாத்து சந்தேகபடும் வகையிக் உள்ளதாகவும் தெரிவித்தார். வாக்கு பதிவுகள் சீராக நடைபெறுவதற்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க | எங்கிருந்தாலும் வந்து வாக்களிப்பது ஜனநாயகப் பொறுப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here