Home Sports விளையாட்டு செய்திகள் Tamilisai Soundararajan Supports For RSS Rally| காந்தி ஜெயந்தியை கொண்டாட ஆர்எஸ்எஸுக்கு உரிமை உண்டு – ஆளுநர் தமிழிசை

Tamilisai Soundararajan Supports For RSS Rally| காந்தி ஜெயந்தியை கொண்டாட ஆர்எஸ்எஸுக்கு உரிமை உண்டு – ஆளுநர் தமிழிசை

0
Tamilisai Soundararajan Supports For RSS Rally| காந்தி ஜெயந்தியை கொண்டாட ஆர்எஸ்எஸுக்கு உரிமை உண்டு – ஆளுநர் தமிழிசை

சி.பா.ஆதித்தனாரின்  118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதித்தனார் சாமானியன் தொழில் செய்வதற்காக புத்தகம் எழுதியவர் நத்தை வேகத்தில் மட்டுமல்ல தந்தி வேகத்திலும் செய்தியை அளிக்க முடியும் என்று செய்து காட்டியவர் என்றார். மேலும் பேசிய அவர், “ எந்த மாநிலமாக இருந்தாலும் அதில் பெட்ரோல் குண்டுகள் வீசும் வன்முறை சம்பவம் நடைபெறக்கூடாது. இது பொது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. எந்த மாநிலமாக இருந்தாலும் வன்முறைக்கு இடமில்லை.

மேலும் படிக்க | காதலி பேசாத அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: சோகத்தில் குடும்பம்

ஆளுநர் எப்படி நடந்து கொள்கிறார் என்று என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தெரியும். அண்ணன் ரங்கசாமி மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்தால் நான் உடன் இருப்பேன். முதன்மை ஆளுநராத்தான் செயல்படுகிறேன் முதலமைச்சராக செயல்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்றைக்கும் மக்களுக்காக செயல்படுவேன். புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு இல்லை.

மேலும் படிக்க | தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

எல்லோரும் சமம் என்று சொல்லும்போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும். ஆர்.எஸ்.எஸ் பேரணி அமைதி பேரணிதான் அதற்க்கு ஏன் தடை விதிக்க வேண்டும். தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு இருக்கிறது.

காந்தி ஜெயந்தியை கொண்டாட மற்றவர்களுக்கு எப்படி உரிமை உள்ளதோ அந்த உரிமை ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கும் உண்டு. நோயாளிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | ‘நான் கத்தினேன், அவன் இளித்தான்’ – இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை – ஆட்டோ ஓட்டுநர் கைது

மேலும் படிக்க | Rajiv Gandhi assassination case : நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here