Home சினிமா செய்திகள் Thala ajith in valimai teaser released on August 15 – தமிழ் News

Thala ajith in valimai teaser released on August 15 – தமிழ் News

0
Thala ajith in valimai teaser released on August 15 – தமிழ் News

[ad_1]

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், குறிப்பாக மோஷன் போஸ்டர் ஒரு சில நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’வலிமை’ படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம். இதனை அடுத்து தற்போது ’வலிமை’ டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

’வலிமை’ படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

’வலிமை’ டீசர் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்பதால் இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அதாவது தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. குறிப்பாக ஆயுத பூஜை தினத்தில் ’வலிமை’ படம் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அஜித்குமார், ஹூமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார் என்பதும் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து உள்ளார் என்பதும் போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here