Home Sports விளையாட்டு செய்திகள் TN Governor should resign says DMK MP TR Balu in regard with NEET in Tamil Nadu | தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்.பி. டி ஆர் பாலு பரபரப்பு பேட்டி

TN Governor should resign says DMK MP TR Balu in regard with NEET in Tamil Nadu | தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்.பி. டி ஆர் பாலு பரபரப்பு பேட்டி

0
TN Governor should resign says DMK MP TR Balu in regard with NEET in Tamil Nadu | தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்.பி. டி ஆர் பாலு பரபரப்பு பேட்டி

[ad_1]

‘ஆளுநர் ரவி தமிழகத்திற்கு தேவையில்லை; அவர் பதவி விலக வேண்டும்’ என திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தவும் மற்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்து விட்டார். அதேபோல இன்று மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுது. இதனைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, “தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. ஆளுநர் அரசியல் சட்டத்தை குழிதோண்டி புதைத்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க முயன்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 9 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அனைத்து கட்சி எம்பி களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அனைத்து கட்சிகளை அரசியல் காரணமாக அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன்” என்றும் கூறினார்.

மேலும் “நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு தேவையில்லை. நீட் தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதற்கு காரனம பொறுப்பு ஆளுநர் தான். சட்டத்தை மதிக்காத அவர், உடடியாக பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ALSO READ | தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசியாவுக்கே முன்மாதிரி: ஆளுநர் புகழாரம்

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு `கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தொல்.திருமாவளவன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நீட் விலக்கு மசோதா மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

ALSO READ | திமுக ஆட்சியில் ‘துப்பாக்கி’ கலாச்சாரம் – குற்றச்சாட்டுகளை அடுக்கிய அதிமுக

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here