Home சினிமா செய்திகள் Vijay Antony in Kodiyil Oruvan third single on June 28 – தமிழ் News

Vijay Antony in Kodiyil Oruvan third single on June 28 – தமிழ் News

0

[ad_1]

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் உருவான ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை அனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து கடந்த மே மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் பாடல் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லம் ஆந்தெம்’ என்று தொடங்கும் இந்த பாடல் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் போலவே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணியையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here