Home சினிமா செய்திகள் Vikram: நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்: ‘விக்ரம்’ படம் குறித்து பிக்பாஸ் நடிகை பரபரப்பு பதிவு.! – biggboss kajal says about kamal’s vikram movie

Vikram: நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்: ‘விக்ரம்’ படம் குறித்து பிக்பாஸ் நடிகை பரபரப்பு பதிவு.! – biggboss kajal says about kamal’s vikram movie

0
Vikram: நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்: ‘விக்ரம்’ படம் குறித்து பிக்பாஸ் நடிகை பரபரப்பு பதிவு.! – biggboss kajal says about kamal’s vikram movie

கமல் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ படம் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகியுள்ள இந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிக்ரகளையும் கவர்ந்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும்‘விக்ரம்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய முதல் நாளிலே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி ‘விக்ரம்’ படம் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண அறிவிப்பில் தகராறு: அஜித்தின் மேலாளர் மீது புகார்.!

‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள் நடித்திருந்தனர். ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் இந்த படத்தில் மிக குறைந்த காட்சிகள் வந்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான காஜல் பசுபதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Kaajal

இது தொடர்பான பதிவில், ‘நாங்களும் விஜய் டிவி சீரியல் நடிகை தான், நாங்கள் எல்லாம் எதுக்கு இருக்கோம், எங்களையும் பயன்படுத்தியிருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ’கமல்ஹாசன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள், சூப்பர் ஜி சூப்பர்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Kaajal Facebook

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here