Home Sports விளையாட்டு செய்திகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கரோனா தொற்று | A female gymnast from the United States has tested positive for the coronavirus,

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கரோனா தொற்று | A female gymnast from the United States has tested positive for the coronavirus,

0
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கரோனா தொற்று | A female gymnast from the United States has tested positive for the coronavirus,

[ad_1]

அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுநடைபெற வேண்டிய இந்தத் தொடர், கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தற்போது நடத்தப்பட உள்ளது.

டோக்கியோவில் அண்மைகாலமாக மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். பின்னர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 3 வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த 3 வீரர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த அடையாளத்தை நிர்வாகக் குழுவினர் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வீரர்களுடன் வந்தவர்கள், ஒருவர் ஒப்பந்ததாரர், ஒருவர் பத்திரிகையாளர் என 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று போட்டிநிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியைக் காண வந்தவர்களில் 55 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபாதுகாப்பு அம்சங்கள், தீவிர பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்படக்கூடிய ஒலிம்பிக் கிராமத்துக்குள் தங்கி இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here