Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்நல்ல செய்தி சொன்ன செம்பருத்தி கார்த்திக்.. நாங்க இருக்கோம்.. ரசிகர்கள் உற்சாகம்! | Sembaruthi Karthickraj...

நல்ல செய்தி சொன்ன செம்பருத்தி கார்த்திக்.. நாங்க இருக்கோம்.. ரசிகர்கள் உற்சாகம்! | Sembaruthi Karthickraj is elated over the support of his fans


செம்பருத்தி ஆதி

செம்பருத்தி ஆதி

பொதுவாக ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை கண்மூடித்தனமாக நம்பும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் .அதை தற்போது கார்த்திக் ராஜின் ரசிகர்கள் நிரூபித்து இருக்கின்றனர் . செம்பருத்தி சீரியல் மூலமாக ஆதி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இதற்கு முன்பும் இவர் ஆபிஸ் சீரியலில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

காரணம் சொல்லவில்லையே

காரணம் சொல்லவில்லையே

ஆனால் தற்போதுதான் இவர் இளம் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார் .பெண் ரசிகர்கள் மட்டுமல்ல ஆண் ரசிகர்களும் இவருக்கு அதிகமாக இருக்கின்றனர். இவர் நடித்து வந்த செம்பருத்தி சீரியலில் இருந்து இவர் திடீரென்று விலகியதும் .இவரை விடவும் இவருடைய ரசிகர்கள் தான் அதிகமாக அதிர்ச்சி அடைந்தனர் .இந்த செய்தி உண்மையாக இருக்காது வதந்தியாக தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர் .

உறுதியான முடிவு

உறுதியான முடிவு

ஆனால் எதற்காக விலகினார் என்று இப்ப வரைக்கும் இவர் கூறவில்லை. மீண்டும் எப்போது இவர் திரையில் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இவரும் காத்திருந்தார் .ஆனால் சூழ்நிலைகள் அதற்கு தகுந்த மாதிரி இல்லாமல் மாறிவிட்டது .அதனால்தான் இவர் தன்னுடைய புது படத்தை பற்றி பேசலாம் என்று இருந்த அதே இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

சாதிக்கும் வெறி

சாதிக்கும் வெறி

அதில் தன்னை புது படங்கள் எதுவும் எடுக்க விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர். அதனால்தான் தான் இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். கே ஸ்டூடியோ ஒன்றை தான் ஆரம்பித்து இருப்பதாகவும் அதில்தான் புது படம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் .ஆனால் அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை . உன்னால் எதையும் செய்ய முடியாது என்று கூறியவர்கள் முன்பு சாதித்துக் காட்ட ஆசைப்படுகிறேன்.

உறுதியான நம்பிக்கை

உறுதியான நம்பிக்கை

அதனால் ரசிகர்களாகிய நீங்கள் உங்களால் முடிந்த பணத்தை எனக்கு அனுப்பி எனது வெற்றிக்கு துணை நிற்க வேண்டுமென்று வங்கி கணக்கையும் கொடுத்திருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஆதரவளித்து பணம் அனுப்பி வருகின்றனர். தற்போது மீண்டும் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் ,உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இதுவரை கே ஸ்டுடியோவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கடினமான காலம் தான்

கடினமான காலம் தான்

எனது முந்தைய பதிவில் கூறியது போல் என் அன்பானவர்களின் உதவியுடன் இந்த படத்தை செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் என்னை ஆதரிப்பவர்களும் இதே எண்ணத்தில் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் .உங்கள் அன்பான ஆலோசனைப்படி இந்த முயற்சியை கைவிடாமல் தொடர விரும்புகிறேன். இதை சாத்தியமாக்க நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது உள்ளது .இதை அடையும்வரை தயவு செய்து உங்கள் ஆதரவை தொடர்ந்து அளியுங்கள் .

Sembaruthi Adhi என்ன படம் பண்ண விடமாட்றாங்க Plz.. உதவி பண்ணுங்க | Karthik Raj

உறுதுணையாக ரசிகர்கள்

உறுதுணையாக ரசிகர்கள்

இந்த கடினமான காலங்களில் உங்களின் நிபந்தனையற்ற பேரன்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் . அதுமட்டுமல்லாமல் இந்தப்படம் விரைவில் தொடங்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் .இந்த போஸ்டை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு ஆதரவினை தெரிவித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதில் அதிகமான ரசிகர்கள் உங்களுக்கு எப்பவுமே உறுதுணையாக நாங்கள் இருப்போம் கவலைப்பட வேண்டாம் என்று தான் கூறி வருகின்றனர்.Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's