Home சினிமா செய்திகள் ரஜினி – இயக்குநர் ஷங்கர் இடையே திடீர் மோதல்…? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயிலர் அப்டேட்! | Rajinikanth’s Jailer, and Shankar’s ‘RC15’ will release on the same date

ரஜினி – இயக்குநர் ஷங்கர் இடையே திடீர் மோதல்…? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயிலர் அப்டேட்! | Rajinikanth’s Jailer, and Shankar’s ‘RC15’ will release on the same date

0
ரஜினி – இயக்குநர் ஷங்கர் இடையே திடீர் மோதல்…? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயிலர் அப்டேட்! | Rajinikanth’s Jailer, and Shankar’s ‘RC15’ will release on the same date

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலரில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணான், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்ட படக்குழு, தற்போது கடலூர் ஹூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் கடலூரில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

அடுத்தாண்டு ரிலீஸ்

அடுத்தாண்டு ரிலீஸ்

ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா தயாரிக்கும் இரண்டு படங்களுக்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படங்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஜெயிலர் படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ரஜினியின் பெரும்பாலான படங்கள் எப்போதுமே தமிழ்ப் புத்தாண்டில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டை ஜெயிலர் குறிவைத்துள்ளது.

ஷங்கருடன் மோதல்

ஷங்கருடன் மோதல்

ஜெயிலர் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் ‘RC 15’, கமல் நடிக்கும் ‘இந்தியன் 2′ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்களும் அடுத்தாண்டு தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக ராம் சரண் RC 15′ 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். அதேபோல், இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த நிலையில், தான் ராம சரணின் RC 15’ படத்தையும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினி நடிப்பில் சிவாஜி, எந்திரன், 2.O படங்களை இயக்கி சூப்பர் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். இப்படி இருக்கும் போது, ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் தேதியில் ஷங்கரின் RC 15′ படமும் வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ராம் சரண் தெலுங்கு ஹீரோவாக இருந்தாலும், ஷங்கரின் படம் என்பதால் RC 15’க்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும். இதனால், ஜெயிலர் படத்தின் வசூல் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய தகவல் படி, ரஜினியின் ஜெயிலர் 2023 ஏப்ரல் 13ம் தேதியும், ஷங்கரின் RC 15′ ஏப்ரல் 14ம் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here