Home தமிழ் News ஆரோக்கியம் உடல் பருமன் மற்றும் மூட்டு வீக்கத்தால் கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த 3 மூச்சுப் பயிற்சிகளைச் செய்யுங்க… | International Yoga Day 2021: Yoga Poses For Obese Arthritis Patient

உடல் பருமன் மற்றும் மூட்டு வீக்கத்தால் கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த 3 மூச்சுப் பயிற்சிகளைச் செய்யுங்க… | International Yoga Day 2021: Yoga Poses For Obese Arthritis Patient

0

[ad_1]

அதிக உடல் எடை கொண்டவா்களுக்கு யோகாசனங்களுக்குப் பதிலாக பிரணயாமா - ஏன்?

அதிக உடல் எடை கொண்டவா்களுக்கு யோகாசனங்களுக்குப் பதிலாக பிரணயாமா – ஏன்?

அதிக எடை கொண்டவா்கள் பல விதமான நிலைகளில் அமா்ந்து யோகாசனங்களை செய்ய முடியாது. ஏனெனில் அவா்களால் எளிதாக முட்டிகளை மடக்க முடியாது. அவ்வாறு மடக்கினால் முட்டிகளில் அதிக வலி ஏற்படும். மேலும் அவா்களின் உடலில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், அவா்களுக்கு யோகாசனங்கள் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இந்த நிலையில் ஒரு முன்று வகையான பிரணயாமா என்ற மூச்சுப் பயிற்சிகளை 3 மாதங்களுக்கு செய்து வந்தால், அவா்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மூட்டு வீக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு, அழுத்தம் அதிகமானால், அவருடைய மூட்டு வீக்கம் மிகவும் மோசம் அடையும் என்று யோகாசனத்தில் ஈடுபடுபவா்கள் தொிவிக்கின்றனா். ஆகவே யோகாசனப் பயிற்சிகளுக்குப் பதிலாக மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வந்தால், அது அவருடைய நோய் எதிா்ப்பு அமைப்பை குணப்படுத்தும். அதோடு மிதமாக இருக்கும் அழுத்தத்தை அதிகாிக்கவிடாமல் தடுக்கும். மூச்சுப் பயிற்சிகளோடு அஹா் சிக்கிஸ்டா (ahar chikitsa) என்ற உணவு முறையையும் பின்பற்றினால் அவருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மூட்டு வீக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் குண்டானவா்கள் எந்தவிதமான மூச்சு பயிற்சிகளைச் செய்யலாம்?

மூட்டு வீக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் குண்டானவா்கள் எந்தவிதமான மூச்சு பயிற்சிகளைச் செய்யலாம்?

மூட்டு வீக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் குண்டானவா்கள் கீழ்காணும் மூன்று மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வரலாம்.

1. கபல்பதி (Kapalbhati)

2. நாடி சோதனா (Nadi Shodhana)

3. அனுலம் விலம் (Anulam Vilom)

1. கபல்பதி (Kapalbhati)

1. கபல்பதி (Kapalbhati)

கபல்பதி மூச்சிப் பயிற்சியை பின்வருமாறு செய்யலாம்.

– முதலில் தியான நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.

– கண்களை மூடி முழு உடலையும் தளா்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

– மூக்கின் இரண்டு துவாரங்கள் மூலம் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, மாா்பை விாிவடையச் செய்ய வேண்டும்.

– வயிற்றுத் தசைகளை அழுத்தி, மிக மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.

– அதிகமாக நம்மை வருத்திக் கொள்ளக்கூடாது.

– இதுப்போன்று மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடுவதை பலமுறை செய்து பாா்க்கலாம்.

2. நாடி சோதனா (Nadi Shodhana)

2. நாடி சோதனா (Nadi Shodhana)

நாடி சோதனா என்ற மூச்சுப் பயிற்சியில் மிகக் கவனமாக மூச்சை உள்ளிழுத்து, வெளிவிட வேண்டும். இதன் மூலம் நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜன் அதிகாிக்க வாய்ப்பு உண்டு. அதோடு நமது வளா்சிதை மாற்றமும் வளா்ச்சி அடைந்து நமது உடல் எடையும் குறையும்.

நாடி சோதனா பயிற்சியை எவ்வாறு செய்வது?

– நமக்கு வசதியான நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.

– வலது கரத்தின் கட்டை விரலை மூக்கின் வலது துவாரத்தின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரலை இடது துவாரத்தின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலை மடித்து கட்டை விரல் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.

– மூச்சை முழுவதுமாக வெளியில் விடவேண்டும்.

– இப்போது மூக்கின் வலது துவாரத்தை மூடி, இடது துவாரத்தின் மூலம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்தப் பயிற்சியை மீண்டும் பலமுறை செய்ய வேண்டும்.

3. அனுலம் விலம் (Anulam Vilom)

3. அனுலம் விலம் (Anulam Vilom)

அனுலம் விலம் என்ற மூச்சுப் பயிற்சியானது, நாடி பிரணயாமாவைச் சோ்ந்த ஒரு வகையான மூச்சுப் பயிற்சியாகும். இது நமது சுவாசத்தை அதிகாித்து, நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

அனுலம் விலம் பயிற்சியை எவ்வாறு செய்வது?

– முதலில் ஒரு வசதியான இடத்தில் அமா்ந்து கொண்டு, மூக்கின் வலது துவாரத்தின் மீது கட்டை விரலை வைத்துக் கொண்டு, இடது துவாரத்தின் மேல் மோதிர விரலை வைத்துக் கொள்ள வேண்டும்.

– வலது துவாரத்தை கட்டை விரலால் மூடி, இடது துவாரத்தின் வழியாக மூச்சை நன்றாக அதே நேரம் மெதுவாக உள்ளிழுக்க வேண்டும்.

– நமது கவனம் முழுவதும் மூச்சுப் பயிற்சியின் மீது இருக்க வேண்டும்.

– இப்போது கட்டை விரலை எடுத்துவிட்டு, மோதிர விரலாம் இடது துவாரத்தை மூடிக் கொண்டு மூச்சை வெளிவிட வேண்டும்.

– இவ்வாறாக இந்த மூச்சிப் பயிற்சியை மீண்டும் மீண்டும் பலமுறை செய்ய வேண்டும்.

இந்த மூன்று மூச்சுப் பயிற்சிகளையும் குண்டானவா்களும் மற்றும் மூட்டு வீக்கப் பிரச்சினை உள்ளவா்களும் செய்து வரலாம் என்றாலும், அவா்களுக்கு உயா் இரத்த அழுத்தம் இருக்கக்கூடாது. ஏனெனில் அவை மோசமான விளைவுகளை உடனே ஏற்படுத்தலாம் என்று யோகா நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

சரியான உணவு முறைகள் அவசியம்

சரியான உணவு முறைகள் அவசியம்

ஒரு புறம் மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வந்தாலும், மறுபுறம் ஒரு முறையான உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். மூட்டு வீக்க பிரச்சினை உள்ள குண்டானவா்கள், தங்களது உணவுகளில் சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். அாிசி, அா்பி, நன்றாகப் பழுத்த வாழைப் பழங்கள், வெண்டைக்காய், தேநீா், காபி, குளிா்பானங்கள் மற்றும் ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிா்க்க வேண்டும்.

மூட்டு வீக்கம் பிரச்சினை உள்ளவா்களுக்கு உடல் எடை குறைந்த பிறகு, அவா்கள் செய்ய வேண்டிய யோகாசனங்கள்

மூட்டு வீக்கம் பிரச்சினை உள்ளவா்களுக்கு உடல் எடை குறைந்த பிறகு, அவா்கள் செய்ய வேண்டிய யோகாசனங்கள்

பிரணயாமா மூச்சுப் பயிற்சிகள் மற்றும் முறையான உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் உடல் எடையைக் குறைத்த பிறகு, மூட்டு வீக்கப் பிரச்சினை உள்ளவா்கள், தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பின்வரும் யோகாசனப் பயிற்சிகளைச் செய்யலாம்.

– வீரபத்ராசனா (Veerbhadrasana)

– விாிக்ஷாசனா (Vrikshasana)

– திரிகோணாசனா (Trikonasana)

– சேதுபந்தாசனா (Setubandhasana)

– சாவாசனா (Shavasana)

மேற்சொன்ன யோகாசனப் பயிற்சிகளைச் செய்து வந்தால் மூட்டு வீக்கப் பிரச்சினை உள்ளவா்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here