Home Sports விளையாட்டு செய்திகள் 'என் வாழ்நாள் முழுவதும் நிற பாகுபாட்டிற்கு ஆளாகினேன்' – சிவராமகிருஷ்ணன்

'என் வாழ்நாள் முழுவதும் நிற பாகுபாட்டிற்கு ஆளாகினேன்' – சிவராமகிருஷ்ணன்

0
'என் வாழ்நாள் முழுவதும் நிற பாகுபாட்டிற்கு ஆளாகினேன்' – சிவராமகிருஷ்ணன்

[ad_1]

‘என்னுடைய வாழ்க்கை முழுவதும் விமர்சனங்களுக்கும், நிற பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன், 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 1983ம் ஆண்டு முதல் 1987 வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில், லட்சுமண் சிவராமகிருஷ்ணின் ட்விட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது.
 
image
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லட்சுமண் சிவராமகிருஷ்ணன் போன்ற விமர்சகர்களிடம் இருந்து ஸ்பின்னர்கள் பற்றிய விமர்சனங்கள் கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. அவர்கள் பேசும் நுணுக்கங்கள் அம்சங்கள் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லது பயிற்சியாளர்களுக்கு கற்பதற்கு சிறப்பாக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார். அவரது ட்விட்டுக்கு பதிலளித்த லட்சுமண் சிவராமகிருஷ்ணன், “என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் விமர்சனங்களுக்கும், நிற பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளேன். அது இனி என்னை தொந்தரவு செய்யாது. ஆனால், துரதிஷ்டவசமாக இது நம் நாட்டிலே நடந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

[ad_2]

Source link

puthiyathalaimurai.com

Web Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here