Home தமிழ் News ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… என்னனு தெரியுமா?

0
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… என்னனு தெரியுமா?

[ad_1]

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று சார்ஜெர் (Charzer). எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியை சார்ஜெர் மேற்கொண்டு வருகிறது. ஏடிடிஏ (ADDA) அமைப்புடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக இந்த நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இந்த கூட்டணி அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், இந்தியா முழுவதும் 1,500 அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்களில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை சார்ஜெர் நிறுவனம் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

ஆனால் இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு எவ்வளவு? என்பதை சார்ஜெர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தியாவில் 2026ம் ஆண்டிற்குள் 4 லட்சம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 20 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை கணக்கில் கொண்டு, இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இதுகுறித்து சார்ஜெர் நிறுவனத்தின் இணை நிறுவனரான சமீர் ரன்ஜன் ஜெய்ஸ்வால் கூறுகையில், ”எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் ரேஞ்ச் பற்றி மக்களுக்கு இருக்கும் அச்சம் விலகும்” என்றார்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு பலர் விரும்புகின்றனர். ஆனால் இதற்கு 2 விஷயங்கள் தடையாக உள்ளன. ஒன்று எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட அதிகப்படியான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டாவது சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

பெட்ரோல் பங்க்குகள் அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் பற்றி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த 2 பிரச்னைகளையும் சரி செய்வதற்கு அரசும், தனியார் நிறுவனங்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

அதாவது கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து பொருளாதார நிலை உயரும். அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் முடிவு கட்ட முடியும். எனவேதான் அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. முதலில் விலையை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு மானியங்களை வழங்கி கொண்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

அதற்கு அடுத்தபடியாக ரேஞ்ச் பற்றிய கவலையை நீக்குவதற்கு சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனவே வரும் காலங்களில் நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களை தைரியமாக வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் தற்போதே நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாகி கொண்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இதில், புதுவரவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

எனவே ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்து விட்டு, ஆர்வமுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய சந்தையில் ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் சவால் அளித்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவில் குறைவான எலெக்ட்ரிக் பைக்குகளே கிடைக்கின்றன. அந்த குறையும் வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும். ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து கூட எலெக்ட்ரிக் பைக்குகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here