Home Sports விளையாட்டு செய்திகள் ஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம் | tokyo Olympics: World No.1 Deepika Kumari beats Jennifer Mucino-Fernandez 6-4 in closely fought contest

ஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம் | tokyo Olympics: World No.1 Deepika Kumari beats Jennifer Mucino-Fernandez 6-4 in closely fought contest

0
ஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம் | tokyo Olympics: World No.1 Deepika Kumari beats Jennifer Mucino-Fernandez 6-4 in closely fought contest

[ad_1]

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தைப் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த தீபிகா குமாரி, தனது விடாமுயற்சியால் தொடர்ந்து 4 செட்களைக் கைப்பற்றி 4-2 என்று முன்னிலை பெற்று, இறுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது பாராட்டுக்குரியது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் வில்வித்தைப் பிரிவில் இன்று நடந்த லீக் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியை எதிர்த்து அமெரிக்காவின் ஜெனிஃபர் முன்சினோ ஃபெர்னாண்டஸ் மோதினார். இந்தப் போட்டியில் ஜெனிஃபரை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

தொடக்கத்தில் இரு செட்களையும் தீபிகா குமாரி இழந்தார், இதனால் ஜெனிஃபர் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். ஆனால், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தீபிகா குமாரி, அடுத்த இரு சுற்றுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, 2 செட்களைக் கைப்பற்றி, 2-2 என்ற கணக்கில் சமன் செய்தார். அடுத்தடுத்த செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

ஆனால், ஃபெர்னாண்டஸ் அடுத்தடுத்த செட்களில் பதிலடி அளித்து, 2 செட்களை வென்று 4-4 என்று தீபிகாவுடன் சமன் செய்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. வெற்றியாளரை முடிவு செய்யும் 5-வது மற்றும் கடைசிச் சுற்றில் தீபிகா தனது அனுபவத்தால் கைப்பற்றி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவின் ஜாதவ் கூட்டணி, காலிறுதியில் தென்கொரியாவின் அன் சான் மற்றும் கிம் ஜி டோக் ஜோடியிடம் 6-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் இருவரும் தோல்வி அடைந்தனர்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here