Home சினிமா செய்திகள் கனவில் கூட நினைக்கவில்லை… நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகார்ஜூனா! | We never even dreamed that Naga Chaitanya and Samantha would split up: Nagarjuna

கனவில் கூட நினைக்கவில்லை… நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகார்ஜூனா! | We never even dreamed that Naga Chaitanya and Samantha would split up: Nagarjuna

0
கனவில் கூட நினைக்கவில்லை… நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகார்ஜூனா! | We never even dreamed that Naga Chaitanya and Samantha would split up: Nagarjuna

[ad_1]

நாக சைதன்யாவுடன் திருமணம்

நாக சைதன்யாவுடன் திருமணம்

நடிகை சமந்தா பாலிவுட்டில் நடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தாவும் நகார்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

விவகாரத்து அறிவிப்பு

விவகாரத்து அறிவிப்பு

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களின் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். கடந்த அக்டோபர் மாதம் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் தங்களின் பிரிவை இருவரும் அறிவித்தனர். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இருவரின் பிரிவும் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விவாகரத்து குறித்து நாகார்ஜூனா

விவாகரத்து குறித்து நாகார்ஜூனா

இந்நிலையில் நடிகர் நாகார்ஜூனா நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரின் விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நடிகை சமந்தா எங்கள் குடும்பத்துடன் மிக விரைவில் இணைந்து விட்டார்.

கனவில் கூட நினைக்கவில்லை

கனவில் கூட நினைக்கவில்லை

எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். சமந்தா எல்லோருடனும் ஜாலியாக இருப்பார். எனக்கும் அமலாவுக்கும் அவர் ஒரு மருமகள் மாதிரி இல்லாமல் மகள் மாதிரி இருந்தார். நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிவார்கள் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை.

ரொம்பவே வேதனை அளிக்கிறது

ரொம்பவே வேதனை அளிக்கிறது

அவர்களின் விவாகரத்து முடிவு ரொம்பவே வேதனை அளிக்கிறது. அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வராமல் இருந்திருக்கலாம். இருவரும் விட்டுக்கொடுத்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமந்தா இப்போது எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும் அவரை நான் என் மகளாகதான் பார்க்கிறேன்.

மனதார பிரார்த்தனை செய்கிறேன்

மனதார பிரார்த்தனை செய்கிறேன்

மேலும் நடிகை சமந்தாவின் சினிமா கேரியரும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்காக மனதார பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு நடிகை சமந்தாவின் முன்னாள் மாமனாரான நாகார்ஜூனா கூறியுள்ளார். நடிகை சமந்தா சமீபத்தில் தான் நடித்து வரும் ஷகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளுக்காக நாகார்ஜூனாவின் ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here