Home Sports விளையாட்டு செய்திகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: தமிழக வீரர் உள்பட 2 இந்திய வர்ணனையாளர்களுக்கு வாய்ப்பு?  | Reports: Dinesh Karthik, Sunil Gavaskar only Indians in commentary panel of WTC final

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: தமிழக வீரர் உள்பட 2 இந்திய வர்ணனையாளர்களுக்கு வாய்ப்பு?  | Reports: Dinesh Karthik, Sunil Gavaskar only Indians in commentary panel of WTC final

0

[ad_1]


இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் உள்பட 2 இந்திய வர்ணனையாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே சவுத்தாம்டன் நகரில் உள்ள ஏஜெஸ்பவுல் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராக மும்பையி்ல் 7 நாட்கள் தனிமைக்கு சென்றுள்ளனர். 7 நாட்கள் முடிந்தபின் பயோ-பபுளுக்குள் சென்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்கின்றனர். அதேசமயம், இங்கிலாந்தில் தங்கியிருக்கும் நியூஸிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியை நேரலையில் வர்ணனை செய்ய இந்தியா சார்பி்ல் இருவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இருவரும் ெசல்ல உள்ளதாகத் தெரிகிறது. இது தவிர, நியூஸிலாந்து முன்னாள் வீரர் சைம் டோல், இங்கிலாந்து வர்ணனையாளர்கள் மைக் ஆர்த்தர்டன், நசீர் ஹூசைன் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை விக்கெட் கீப்பிங் கிளவுஸ், பேட்டை மட்டுமே பிடித்துவந்த தினேஷ் கார்த்திக் முதல்முறையாக மைக்பிடித்து வர்ணனையாளர் பணியில் ஈடுபட உள்ளார். ஆனால், சுனில் கவாஸ்கர் ஏராளமானப் போட்டிகளுக்கு வர்ணனையாளராகப் பணி புரிந்துள்ளார். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கை வித்தியாசமான அவதாரத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here