Home Sports விளையாட்டு செய்திகள் “பந்து ஸ்விங்கானால் கோலி பின்னடைவை சந்திப்பார” – நியூசிலாந்து பயிற்சியாளர் | Virat Kohli likely to struggle if the ball moves in Southampton says Glenn Turner | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

“பந்து ஸ்விங்கானால் கோலி பின்னடைவை சந்திப்பார” – நியூசிலாந்து பயிற்சியாளர் | Virat Kohli likely to struggle if the ball moves in Southampton says Glenn Turner | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

0

[ad_1]

Virat-Kohli-likely-to-struggle-if-the-ball-moves-in-Southampton-says-Glenn-Turner

சவுத்தாம்படன் மைதானத்தில் பந்து ஸ்விங் ஆனால் கோலி பின்னடைவை சந்திப்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.

‘தி டெலிகிராப்’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள க்ளென் டர்னர் “விராட் கோலி திறமை குறித்து உயர்த்தியோ, தாழ்த்தியோ நான் பேச விரும்பவில்லை. ஒருவேளை சவுத்தாம்டன் மைதானத்தில் பந்துகள் அதிவேகத்தில் ஸ்விங் ஆகும் பட்சத்தில் கோலி பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால் இவரை விரைவில் பெவிலியனுக்கு அனுப்ப முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை காலநிலையும் மிகவும் முக்கியம். இங்கிலாந்து காலநிலை நியூசிலாந்தில் இருப்பதைப் போல்தான் இருக்கும். இது எங்களுக்குக் கூடுதல் சாதகம். கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார்.

image

மேலும் பேசிய அவர் “கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறது. இருப்பினும், நியூசிலாந்து மைதானங்களுடன் ஒப்பிட முடியாது. நியூசிலாந்து, இங்கிலாந்தில் பந்துகள் நல்லமுறையில் ஸ்விக் ஆகும்” என்றார் க்ளென் டர்னர். இப்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்தது. நியூசிலாந்து அணி அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாத்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடக்கிறது. இதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பயோ பபுள் விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.விரைவில் இந்திய வீரர்கள் சவுத்தாம்டன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here