Home தமிழ் News ஆரோக்கியம் பொன்னியின் செல்வனில் கம்பேக் கொடுக்கும் ஷாலினி அஜித்? – சுரேஷ் சந்திரா விளக்கம் | Shalini Ajith Giving a Comeback On Mani Ratnam Ponniyin Selvan

பொன்னியின் செல்வனில் கம்பேக் கொடுக்கும் ஷாலினி அஜித்? – சுரேஷ் சந்திரா விளக்கம் | Shalini Ajith Giving a Comeback On Mani Ratnam Ponniyin Selvan

0
பொன்னியின் செல்வனில் கம்பேக் கொடுக்கும் ஷாலினி அஜித்? – சுரேஷ் சந்திரா விளக்கம் | Shalini Ajith Giving a Comeback On Mani Ratnam Ponniyin Selvan

[ad_1]

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி. இதைத்தொடர்ந்து 1997-ம் ஆண்டு வெளியான ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்த இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதற்கு அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 2000-ம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். 

இதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்த ஷாலினிக்கும் அஜித்குமாருக்கும் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஷாலினி தற்போது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். பிரஷாந்த் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படம் தான் ஷாலினி கடைசியாக நடித்த படம். 

இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மூலம் ஷாலினி மீண்டும் சினிமாவில் ரீ – என்ட்ரி ஆக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. 2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஷாலினி சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது. 

Shalini Ajith

மேலும் படிக்க | X அல்லது Yகுரோமோசோம் அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு அதிக நோய்கள் வர வாய்ப்பு: ஆய்வு

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாலினி சினிமாவில் நடித்துள்ள தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஜெயம்ரவி, கார்த்திக், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் டீசர் சோழ மண்ணான தஞ்சையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

தமிழின் எவர் க்ரீன் நாவலான பொன்னியின் செல்வனை வெள்ளித்திரையில் காண தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வனில் ஷாலினி அஜித் குமார் நடித்திருப்பதாக வெளியான தகவல் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மேலும் வலு கூட்டியது. 

Ponniyin Selvan

இதனிடையே ஷாலினி அஜித்குமாரின் சினிமா கம்பேக் பற்றி அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி அஜித்குமார் நடிப்பதாக வெளியான தகவலில் ஒருசதவீதம் கூட உண்மையில்லை. இது முற்றிலும் தவறான தகவல் என அவர்  கூறியுள்ளார். இதனால் ஷாலினி அஜித்குமாரை மீண்டும் வெள்ளித்திரையில் காணலாம் என எதிர்நோக்கியிருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | இனத்தூய்மையை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டம் – நாடு பிளவுபடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here