Home தமிழ் News ஆட்டோமொபைல் 10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

0
10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

[ad_1]

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் தான் முதலிடத்தில் முன்னிலை வகிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இத்தகைய நிறுவனத்திற்கு பல வருடங்களாக நம்பிக்கைக்குரிய மாடலாக விளங்குவது ஆல்டோ ஆகும். 2000இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி ஆல்டோ கிட்டத்தட்ட 22 வருடங்களாக சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக ஒவ்வொரு மாதத்திலும் திகழ்ந்து வந்துள்ளது.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

2000இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டோவிற்கு 2ஆம் தலைமுறை அப்கிரேடை கடந்த 2012இல் மாருதி சுஸுகி வழங்கியது. அதன்பின் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு மூன்றாம் தலைமுறை அப்கிரேடை மாருதி சுஸுகியின் இந்த பிரபலமான ஹேட்ச்பேக் கார் பெறவுள்ளது. இந்த நிலையில் இரு 3ஆம் தலைமுறை ஆல்டோ கார்கள் பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து டீம் பிஎச்பி செய்திதளம் வாயிலாக கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படத்தினை கீழே காணலாம்.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

Source: Team BHP

இந்த ஸ்பை படத்தில் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் கார்கள் காட்சியளிக்கின்றன. இதில் இருந்து தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் இருந்து இந்த ஸ்பை படம் வெளியாகியுள்ளது என்பதை அறிய முடிகிறது. புதிய ஆல்டோ கார்கள் இதற்கு முன்பும் சிலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளம் காணப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமயங்களில் கார் மறைப்பால் மறைக்கப்பட்டே இருந்தது.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

ஆனால் இந்த ஸ்பை படத்தின் மூலம் முதல்முறையாக எந்தவொரு மறைப்புமின்றி, புதிய தலைமுறை ஆல்டோ கார்கள் காட்சி தந்துள்ளன என்றே சொல்ல வேண்டும். மூன்றாம் தலைமுறை ஆல்டோ கார்களின் உற்பத்தி பணிகள் மாருதி சுஸுகியின் குருக்ராம் தொழிற்சாலையில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த காரின் அறிமுகத்தை அடுத்த ஆகஸ்ட் மாதத்திலும், டெலிவிரிகளை பண்டிகை காலங்களில் இருந்தும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

இந்த ஸ்பை படத்தை வைத்து பார்க்கும்போது, தற்போதைய ஆல்டோவை காட்டிலும் புதிய மூன்றாம் தலைமுறை மாடலானது உயரமாகவும், நீளமானதாகவும் தோற்றமளிக்கிறது. இதன் காரணமாக சாலை நிலைப்பாடானது புதிய ஆல்டோவில் சிறப்பானதாக விளங்குகிறது. எந்த அளவிற்கு காரின் நீளம் மற்றும் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய புதிய ஆல்டோவின் அதிகாரப்பூர்வ அறிமுகம் வரையில் காத்திருந்தாக வேண்டும்.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

பரிமாண அளவுகள் மட்டுமின்றி, பக்கவாட்டிற்கும் சேர்த்து வளைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள், முன் & பின்பக்க பம்பர், புதிய ஃபாக் விளக்குகள் மற்றும் திருத்தப்பட்ட டெயில்லைட்கள் என ஸ்டைலிங் பாகங்களிலும் புதிய ஆல்டோ மெருக்கேற்றப்பட்டதாக உள்ளது. இந்த ஸ்பை படத்தில் காரின் முன்பக்கத்தை காண முடியவில்லை, இருப்பினும் வழக்கத்தை காட்டிலும் அகலமான க்ரில் அமைப்பை எதிர்பார்க்கிறோம்.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

புதிய ஆல்டோவின் பக்கவாட்டு பகுதியானது பெட்டகம் போன்றதாக காட்சியளிக்கிறது. மேற்கூரை தட்டையானதாகவும், இதனை தாங்கி நிற்கும் முன் & பின்பக்க ஃபெண்டர்கள் அகலமானதாக வழங்கப்பட்டிருப்பதாலும் புதிய தலைமுறை ஆல்டோ ஆனது சற்று க்ராஸ்ஓவர் போன்று காட்சியளிக்கிறது. இதற்கேற்ப முன்பக்க பொனெட் பகுதி சம தட்டையானதாக வழங்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களின் வருகைக்கு பின்னர் ஆல்டோவின் விற்பனை சற்று குறைய துவங்கியது. இதன் காரணமாக புதிய ஆல்டோவை க்ராஸ்ஓவர் போன்றதான வடிவமைப்பில் மாருதி சுஸுகி கொண்டுவர முயற்சிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக சுஸுகியின் புதிய தலைமுறை ஹெர்ட்டெக் இயக்குத்தளத்தின் அடிப்படையில் புதிய ஆல்டோ கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

இதனால் 2022 ஆல்டோவை அளவில் பெரியதாகவும், எடை குறைவானதாகவும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். இதன் விளைவாக உட்புற கேபினில் கூடுதல் இடவசதி கிடைக்கும். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சாவியில்லா நுழைவு உள்ளிட்டவற்றை புதியவைகளாக எதிர்பார்க்கிறோம்.

10 வருடங்களுக்கு பிறகு ஆல்டோ காரை அப்டேட் செய்யும் மாருதி சுஸுகி!! புதிய மாடலின் தோற்றம் இப்படிதான் இருக்கும்!

அத்துடன் புதிய ஆல்டோவின் டேஸ்போர்டு மற்றும் இருக்கை உள்ளமைவும் புதிய மாடலில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வழக்கமான 796சிசி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வை தொடரவுள்ள 2022 ஆல்டோவில் புதியதாக 1.0 லிட்டர் கே10சி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வையும், இதற்கு 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வையும் வழங்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here