Home தமிழ் News ஆரோக்கியம் 15 Years Of Paruthiveeran – All Praise Goes To Aamir Sir Says Karthi! | எல்லா புகழும் அமீர் சாருக்கே – நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

15 Years Of Paruthiveeran – All Praise Goes To Aamir Sir Says Karthi! | எல்லா புகழும் அமீர் சாருக்கே – நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

0
15 Years Of Paruthiveeran – All Praise Goes To Aamir Sir Says Karthi! | எல்லா புகழும் அமீர் சாருக்கே – நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

[ad_1]

கடந்த 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் ‘பருத்திவீரன்‘.  இந்த படத்தின் மூலம் நடிகர் கார்த்தி திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது அதிக ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கின்றார்.  முழுக்க முழுக்க மண் மனம் கமழும் இந்த படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.  இந்த படம் இயக்குனர் அமீர் இயக்கிய மூன்றாவது படமாகும்.

மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தானவை திருமணம் செய்கிறேனா? விஜய் தேவரகொண்டா

இப்படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு, போன்ற பலரும் நடித்திருந்தனர்.  சண்டை, நகைச்சுவை மாற்று காதல் என கலவையாக இந்த படம் உருவானது.  நடிகர் கார்த்திக்கு முதல் படமே பெயரையும், புகழையும் பெற்று தந்தது.  யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் பல ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகின்றன.  இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்தும், படத்தின் இயக்குனர் அமீர் குறித்து சில செய்திகளை வெளியிட்டு நடிகர் கார்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  அதில் “பருத்திவீரன் படத்தின் மூலம் என்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கியதை நினைக்கையில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.  என்னுடைய ஒவ்வொரு அசைவுகளும் இயக்குனர் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டது தான், எனக்கு நிறைய கற்று கொடுத்திருக்கிறார், எல்லா புகழும் நிச்சயம் அமீர் சாரை தான் சேரும்.  அவருடன் பணிபுரிந்து இன்றளவும் எனக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாக உள்ளது.  என்னை இத்தைகைய அழகான பாதையில் கொண்டு சென்ற இயக்குனர் அமீர், ஞானவேல், என் அண்ணன், எனது ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க | ‘மாநாடு’ தெலுங்கு ரீமேக்கில் இவர்களா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here