Home தமிழ் News ஆட்டோமொபைல் 200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

0
200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

[ad_1]

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

கடந்த பிப்ரவரி மாதத்தில் 200சிசி-யில் இருந்து 500சிசி-க்கு உள்ளாக மொத்தம் 59,411 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த விற்பனை எண்ணிக்கை 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 23.76% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் சுமார் 77,931 200-500சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

கடந்த ஜனவரி மாதத்தில் கூட 63,384 பைக்குகள் இந்த பிரிவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 200-500சிசி பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட 6.27% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. இந்த லிஸ்ட் வழக்கம்போல் ராயல் என்பீல்டு கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எந்த அளவிற்கு என்றால், முதல் 4 இடங்களில் ராயல் என்பீல்டின் தயாரிப்புகளே உள்ளன.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

அதிலிலும் குறிப்பாக, ஏறக்குறைய 30 ஆயிரம் யூனிட்களின் விற்பனை உடன் கடந்த பிப்ரவரி மாத மொத்த 200-500சிசி பைக்குகளின் விற்பனையில் 50.63 சதவீதத்தை கொண்டுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் 2021 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் கடந்த மாதத்தில் கிளாசிக் 350-இன் விற்பனை 16.50% குறைந்துள்ளது.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

ஏனெனில் அந்த மாதத்தில் 36,025 கிளாசிக் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் ராயல் என்பீல்டின் மற்ற பிரபலமான 350சிசி பைக்குகளான மீட்டியோர் 350 மற்றும் புல்லட் 350 முறையே 6,749 மற்றும் 6,432 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2021 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் முறையே 21.74% மற்றும் 41.76% குறைந்துள்ளது.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

கடந்த மாத மொத்த 200-500சிசி பைக்குகளின் விற்பனையில் மீட்டியோர் 350-இன் பங்கு 11.36% மற்றும் புல்லட் 350-இன் பங்கு 10.83% ஆகும். இவற்றை காட்டிலும் வாடிக்கையாளர்களின் மத்தியில் சற்று கவனத்தை இழந்துவந்தாலும் ராயல் என்பீல்டு எலக்ட்ரா 350, மற்ற அனைத்தையும் முந்திக்கொண்டு இந்த வரிசையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரா 350 பைக்குகளின் எண்ணிக்கை 3,426 ஆகும்.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

ஆனால் 2021 பிப்ரவரியில் 6,477 எலக்ட்ரா 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கு அடுத்தே மீட்டியோர் 350-க்கு போட்டியாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹைனெஸ் சிபி350 உள்ளது. 2021 பிப்ரவரியில் 3,268 ஹைனெஸ் சிபி350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதன் விற்பனை எண்ணிக்கை 3,099 ஆக பதிவாகியுள்ளது.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

ஆனால் புதிய தலைமுறை அப்டேட்டினால் 2021 பிப்ரவரியில் 2,660 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் கடந்த மாதத்தில் அதனை காட்டிலும் 11.92% அதிகமாக 2,977 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹிமாலயனுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் பஜாஜ் பல்சர் 220/ 250 பைக்குகள் உள்ளன. இவை கடந்த மாதத்தில் 2,475 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

ஆனால் உண்மையில் 2021 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பல்சர் 220 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இத்தனைக்கும் அப்போது புதிய பல்சர் 250 பைக்குகள் விற்பனையில் இல்லை. கேடிஎம் 250 பைக்குகள் இந்த வரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளன. கேடிஎம் 250சிசி பைக்குகளின் விற்பனை 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 356.73% அதிகரித்துள்ளது.

200- 500சிசி பைக்குகளின் விற்பனை குறைவு!! ராயல் என்பீல்டு பிராண்டை தவிர்க்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

ஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 312 கேடிஎம் 250 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை 1,425 ஆக பதிவாகியுள்ளது. அதுவே பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விற்பனை 748 யூனிட்களில் இருந்து 476 யூனிட்களாகவும், 10வது இடத்தில் உள்ள ஹோண்டா சிபி300ஆர்-இன் விற்பனை எண்ணிக்கை 429 யூனிட்களாவும் பதிவாகியுள்ளன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here