Home சினிமா செய்திகள் 25 மொழிகளில் நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை இணையதளம் தொடக்கம் | chiranjeevi foundation website in 25 languages

25 மொழிகளில் நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை இணையதளம் தொடக்கம் | chiranjeevi foundation website in 25 languages

0
25 மொழிகளில் நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை இணையதளம் தொடக்கம் | chiranjeevi foundation website in 25 languages

[ad_1]

chiranjeevi-foundation-website-in-25-languages

ஹைதராபாத்

நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை இணையதளம் 25 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆகையால் ரத்த தானம், கண் தானம் செய்ய முன் வருபவர்கள் இனி ஆன்லைன் மூலமாக மொழி பிரச்சினையின்றி தானம் செய்ய முன் வரலாம் என அவரது நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தெரிவித்தார்.

ஆந்திரா, தெலங்கானாவில் அமைந்துள்ள நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை சார்பில் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி விருப்பமுள்ள பலர் ரத்த தானம், கண் தானம் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண், 25 மொழிகளில் சிரஞ்சீவி அறக்கட்டளையின் இணைய தளத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, “இனி மொழி பிரச்சினை இன்றி மக்கள் ரத்ததானம், கண் தானம் செய்ய முன் வரலாம். இவர்களுக்காக இனி ஆன்-லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கெல்லாம் பெருமையாகும். மேலும், கே. சிரஞ்சீவி எனும் புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிரஞ்சீவி இதுவரை நடித்த படங்கள், பாடல்கள், அவரது வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்” என்றார்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here