Home Sports விளையாட்டு செய்திகள் இந்திய அணிக்கு ஏன் இவ்வளவு சொதப்பல்.. அஸ்வினை எடுக்காமல் கோலி தவறு செய்துவிட்டாரா?

இந்திய அணிக்கு ஏன் இவ்வளவு சொதப்பல்.. அஸ்வினை எடுக்காமல் கோலி தவறு செய்துவிட்டாரா?

0
இந்திய அணிக்கு ஏன் இவ்வளவு சொதப்பல்.. அஸ்வினை எடுக்காமல் கோலி தவறு செய்துவிட்டாரா?

[ad_1]

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்கிலே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

image

ஆடும் லெவனை மாற்ற மனமில்லை – கோலி!

‘லார்ட்ஸ் போட்டியில் விளையாடிய ஆடும் லெவனின் வெற்றிக் கூட்டணியை மாற்ற மனமில்லை’ என லீட்ஸ் போட்டியில் டாஸ் வென்ற பிறகு கோலி தெரிவித்திருந்தார். 64 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தியுள்ளார் கோலி. அதில் 4 முறை மட்டுமே அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஆடும் லெவனை மாற்றாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட் செய்ய விரும்புவதாக கோலி தெரிவித்திருந்தார். ஆனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. மேலும் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய பவுலர்களும் அதை ஏனோ செய்ய தவறினார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் திறனா? ஆடுகளத்தின் தன்மையா? இந்திய பவுலர்கள் லைன் மற்றும் லெந்தா? என்ற கேள்வி எல்லாம் எழுந்தன.

image

அஸ்வினும் இடது கை பேட்ஸ்மேன்களும்!

இங்கிலாந்து அணியில் ரோரி பேர்ன்ஸ், டேவிட் மலன், மொயின் அலி மற்றும் சாமி கர்ரன் என நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுகின்றனர். இதில் மலன் இந்த போட்டியில் புதுவரவு. பொதுவாகவே இடது கை பேட்ஸ்மேன்களை துரிதமாக அவுட் செய்யும் வல்லமை அஸ்வினிடம் உள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அதிகம் அவுட் செய்தது இடது கை பேட்ஸ்மேன்களை தான்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடது கை பேட்ஸ்மேன்களை அஸ்வின் அவுட் செய்துள்ளார். இதுவரை 211 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவர் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஸ்வின் விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகளும் இடது கை பேட்ஸ்மேன்கள் தான். டாம் லேதம், வேக்னர் மற்றும் கான்வே ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியிருந்தார். இதில் லேதம் இரண்டு முறை அஸ்வினிடம் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். 

இங்கிலாந்து சூழல் சுழலுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்காது என சொல்வது வழக்கம். அதனால் இந்தியா ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடி வருகிறது. இருப்பினும் அப்படி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இதுவரை ஜடேஜா விக்கெட்டை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

image

ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே அஸ்வின் விளையாடுவாரா? என்பது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆடுகளத்தில் புற்கள் அதிகம் இருந்த காரணத்தினால் அஸ்வின் நிச்சயம் விளையாடுவார் என்ற யூகங்கள் எல்லாம் கூட எகிறி இருந்தன. ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது நடந்துள்ளது. 

அதே நேரத்தில் அவர் இந்த போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பதையும் சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் இந்தப் போட்டியில் விளையாடி இருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரில் விளையாடிய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இம்சை கொடுத்திருப்பார். அதன் மூலம் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். 

அஸ்வின் கடந்த 2017 முதல் இதுவரையில் விளையாடியுள்ள கவுன்டி சாம்பியன்ஷிப்பில் 10 ஆட்டங்களில் 61 விக்கெட்டுகளையும், 553 ரன்களையும் குவித்துள்ளார். இதில் 7 முறை 5 விக்கெட்-ஹால் பதிவு செய்துள்ளார் அவர். Somerset அணிக்காக அவர் அண்மையில் விளையாடிய போது ஒரே இன்னிங்ஸில் 27 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இருப்பினும் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் உள்ளது புரியாத புதிராக உள்ளது. அடுத்தப் போட்டியில் நிச்சயம் இந்தியா ஆடும் லெவனில் மாற்றம் செய்யும். அதில் அஸ்வின் இருப்பார் என நம்புவோம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here