Home தமிழ் News ஆரோக்கியம் Actor Vishal Full Stops To Rumors About He Was Partificipating In AndhraPradesh Election | தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர அரசியலில் போட்டியிடும் விஷால்

Actor Vishal Full Stops To Rumors About He Was Partificipating In AndhraPradesh Election | தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர அரசியலில் போட்டியிடும் விஷால்

0
Actor Vishal Full Stops To Rumors About He Was Partificipating In AndhraPradesh Election | தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர அரசியலில் போட்டியிடும் விஷால்

[ad_1]

கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் விஷால் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிட இருப்பதாக சில தகவல்கள் தீயாய் பரவி வந்தது.  நடிகர் சங்க தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிகண்ட நடிகர் விஷால் முழுவதுமாக அரசியலில் குதிக்க இருக்கிறார் என்று பல செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தது.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு உள்ளது.

மேலும் படிக்க | விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் இதுதான்!

இதனால் அவரை தோற்கடிக்க ஒரு வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என எண்ணி ஜெகன் மோகன் ரெட்டி நடிகர் விஷாலை போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் என்று கூறப்பட்டது.  சித்தூர் மாவட்டத்தில் குப்பம் தொகுதி உட்பட பெரும்பாலான பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த பல நபர்கள் குடிபெயர்ந்து பணிபுரிந்து வருகின்றனர், மேலும் இந்த பகுதியில் தான் விஷாலின் தந்தை பிசினஸ் செய்து வருகிறார் என்றும், இந்த தொகுதியில் விஷால் நன்கு அறிமுகமான முகம் என்பதால் அவரை வேட்பாளராக நிறுத்தினால் தேர்தலில் வெற்றிகண்டுவிடலாம் என நினைத்து விஷாலை போட்டியிட வைப்பதாக செய்திகள் வெளியானது.  மேலும் ஆந்திர அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி வேட்பாளராக நடிகர் விஷாலை பரிந்துரைத்தார் என்றும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் இந்த செய்தி வெறும் வதந்தி என்றும் தான் அரசியலில் போட்டியிடவில்லை என்றும் நடிகர் விஷால் அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில் “ஆந்திர அரசியலில் நான் ஈடுபட போவதாகவும், குப்பம் தொகுதியில் நான் போட்டியிடப்போவதாகவும் பல வதந்திகளை நான் கேட்டு வருகிறேன்.  நான் இதனை முற்றிலுமாக மறுக்கிறேன், அரசியலில் ஈடுபட என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.  இந்த செய்தி எங்கிருந்து வெளியானது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.  நான் படங்களில் மட்டும் தான் பணியாற்றுகிறேன், ஆந்திர தேர்தலில் போட்டியிடவோ அல்லவோ சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ  எண்ணமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | திரும்பி வந்துட்டேனு சொல்லு..! 6 மாதத்தில் வெளியாகும் சிம்புவின் 3 படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here