Home தமிழ் News ஆரோக்கியம் After the success of kodiyil oruvan, Vijay antonys next movie title as kolai

After the success of kodiyil oruvan, Vijay antonys next movie title as kolai

0
After the success of kodiyil oruvan, Vijay antonys next movie title as kolai

[ad_1]

‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது. ‘விடியும் முன்’ புகழ் பாலாஜி கே குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைத்து வரும் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு கொலை என்று பெயர் வைத்துள்ளார்.  இதுவரை இல்லாத வகையில் புதிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

ALSO READ தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் பங்குதாரர்களான கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் தொடர்ச்சியாக படங்களை விஜய் ஆண்டனியுடன் தயாரிக்க உள்ளனர்.  ’கொலை’ திரைப்படத்திற்காக லோட்டஸ் பிக்சர்ஸுடன் இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் கைகோர்த்துள்ளது. மலேசியாவை சேர்ந்த லோட்டஸ் குழுமத்தின் டான் ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா ஷங்கர் மற்றும் ஆர் வி எஸ் அசோக் ஆகியோருடன் இணைந்து லோட்டஸ் பிக்சர்ஸுக்கு தலைமை ஏற்றுள்ளார்.

‘விடியும் முன்’ படத்தை இயக்க லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சென்னை திரும்பிய பாலாஜி கே குமார், அப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றதோடு, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார். தற்போது ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கியுள்ளார். ‘கொலை’ திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijayantory

ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ‘கொலை’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  ‘இறைவி, இறுதி சுற்று, கோலமாவு கோகிலா’ மற்றும் ‘விடியும் முன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மெரினா மற்றும் நெற்றிக்கண் புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

கர்ணன், சர்பட்டா பரம்பரை மற்றும் பரியேறும் பெருமாள் புகழ் செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாள, கே ஆறுசாமி கலை இயக்கத்திற்கும், மகேஷ் மேத்யூ சண்டை காட்சிகளுக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.  படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகளவில் தேவைப்படுவதால், பணியை விரைந்து முடிக்க சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ‘கொலை’ திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ கேரளா மாநில விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய Kappela திரைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here