Home தமிழ் News ஆரோக்கியம் Amazon Prime bought the Direct OTT rights of Saani Kaayidham!

Amazon Prime bought the Direct OTT rights of Saani Kaayidham!

0
Amazon Prime bought the Direct OTT rights of Saani Kaayidham!

[ad_1]

கடந்த ஆண்டு தமிழில் வெளியான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான ‘ராக்கி’ படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக களமிறங்கியவர் அருண் மாதேஸ்வரன்.  இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ (saani kaayidham) படம் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.  இப்படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ளார், மேலும் இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

saanikaayidham

ALSO READ | வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரியங்கா சோப்ரா!

‘ராக்கி’ படம் வெளியாவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் மற்றும் செல்வராகவன் (Director Selvaragavan) கூட்டணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  செல்வராகவனின் பிறந்தநாளான மார்ச் 5ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்து இருந்தது. 

இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்போவதாகவும், இதுகுறித்து படக்குழு OTT  தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.  மேலும் ‘சாணிக்காயிதம்’ படம் பிப்ரவரி மாதம் வெளியாகப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது.  இந்நிலையில் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ OTT தளத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாணிக்காயிதம் படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

 

ALSO READ | ‘ஓ மை கடவுளே’ இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here