Home தமிழ் News ஆரோக்கியம் Avatar 2 Movie Released in 160 languages | 160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2 ட்ரெய்லர் எப்போது

Avatar 2 Movie Released in 160 languages | 160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2 ட்ரெய்லர் எப்போது

0
Avatar 2 Movie Released in 160 languages | 160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2 ட்ரெய்லர் எப்போது

[ad_1]

டைட்டானிக், தி டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது.

இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

James Cameron

டால்பி ப்ரீமியம் 4k உடன் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது உலகம் முழுவதும், 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் அவதார் படத்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதையும் உலகம் உணர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க | ராம் சரண் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கம்

இந்நிலையில் படத்தின்  ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த சூழலில் அமெரிக்காவில் நடந்துவரும் CinemoCon நிகழ்ச்சியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

James Cameron

அதுமட்டுமின்றி இந்த விழாவிலேயே அவதார் இரண்டாம் பாகத்தின் 15 முதல் 20 நிமிடங்கள் வரையிலான க்ளிம்ப்ஸ் காட்சிகள் திரையிடப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அவதார் 2 படத்தை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | KGF நாயகன் யஷ் உண்ணும் உணவுகள் இவைதான்: ஜாலியாக அழகாகும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here