Home சினிமா செய்திகள் CM Stalin participate in Saranya daughter Priyadharshini marraige – தமிழ் News

CM Stalin participate in Saranya daughter Priyadharshini marraige – தமிழ் News

0

[ad_1]

நடிகை சரண்யா மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆச்சரியம் அளித்துள்ளது.

நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் மற்றும் குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் மூத்த மகள் பிரியதர்ஷினி. இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


.
இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்தத் திருமணத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பசுமை கூடையை பரிசளித்தார். அவரது வருகை மணமக்களுக்கும், பொன்வண்ணன் – சரண்யா தம்பதிக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்வண்ணன் – சரண்யா தம்பதிகளின் மகள் திருமணத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here