Home தமிழ் News ஆரோக்கியம் history about Vasanthi who acted as agent tina in kamal hassan starrer vikram is here| விக்ரமில் மிரட்டிய Agent Tina: விஜய், அஜித்கூடவும் வொர்க் பண்ணிருக்காங்களா?Movies

history about Vasanthi who acted as agent tina in kamal hassan starrer vikram is here| விக்ரமில் மிரட்டிய Agent Tina: விஜய், அஜித்கூடவும் வொர்க் பண்ணிருக்காங்களா?Movies

0
history about Vasanthi who acted as agent tina in kamal hassan starrer vikram is here| விக்ரமில் மிரட்டிய Agent Tina: விஜய், அஜித்கூடவும் வொர்க் பண்ணிருக்காங்களா?Movies

[ad_1]

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வசூல் மழை பொழிந்துவரும் இப்படம் உலகளவில் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாம். 

விக்ரம் படத்தைப் பொறுத்தவரை இதில் நடித்துள்ள முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாக அதில்  ஏஜெண்ட் டீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்தியின் கேரக்டரும் வெகுவாகக் கவனம் ஈர்த்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அவர் தொடர்பான ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் திரையரங்கமே அதிர்கிறது. கதையில் முக்கியமான நேரத்தில் முடிச்சு அவிழ்க்கப்படும் அவர் தொடர்புடைய காட்சிகள், படத்துக்குப் பலம் சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

பார்வையாளர்கள் பலரும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள் எனச் சொல்லும் அளவுக்கு அவரது கேரக்டர் அமைந்திருக்கிறது. இந்நிலையில், ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விக்ரம் படம் வாயிலாகப் பலருக்கும் அறிமுகமாகியுள்ள வசந்திக்கு சினிமா ஒன்றும் புதிதில்லையாம்.

சுமார் 30 ஆண்டுகளாகவே சினிமாத்துறையில்தான் இருந்து வருகிறார் வசந்தி. நடன உதவி இயக்குநராகப் பல வெற்றிப் படங்களில் பணியாற்றி உள்ளார் வசந்தி. பிருந்தா மாஸ்டர் மற்றும் தினேஷ் மாஸ்டர் உள்ளிட்டோருடன் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ள வசந்தி, முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் சமந்தாவுக்கு மனசெல்லாம், பாணா காத்தாடி ஆகிய படங்களில் நடனத்தில் பணிபுரிந்துள்ளாராம். 

மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?

நடிகர் சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடிகை நயன்தாராவுக்கும் இவர் நடன இயக்குநராகப் பணிபுரிந்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய்யுடன் பகவதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் அஜித்துடன் வலிமை உள்ளிட்ட படங்களிலும் நடனத்தில் பணிபுரிந்துள்ளாராம் வசந்தி.

விக்ரமில் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் வசந்திக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளதால் அவருக்கான மவுசு தற்போது அதிகரித்துள்ளது. அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்கப் பலர் போட்டி போட்டு கால்ஷீட் வாங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா…ரெண்டே நாளில் 100 கோடி வசூல்- விஸ்வரூபம் எடுத்த ‘விக்ரம்’!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here