Home தமிழ் News ஆரோக்கியம் I am Worried For Not Directing A Single Movie Of Thalapathy Vijay Says Sundar C | லைஃப்ல எனக்கு இருக்க ஒரே ஃபீலிங் இதுதான் வருத்தம் தெரிவித்த சுந்தர் சி

I am Worried For Not Directing A Single Movie Of Thalapathy Vijay Says Sundar C | லைஃப்ல எனக்கு இருக்க ஒரே ஃபீலிங் இதுதான் வருத்தம் தெரிவித்த சுந்தர் சி

0
I am Worried For Not Directing A Single Movie Of Thalapathy Vijay Says Sundar C | லைஃப்ல எனக்கு இருக்க ஒரே ஃபீலிங் இதுதான் வருத்தம் தெரிவித்த சுந்தர் சி

[ad_1]

நடிகர் விஜய்க்கு என்னதான் ஹேட்டர்ஸ் இருந்தாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அந்த ஹேட்டர்ஸ் அணுத்துகளை விட சிறிய துகள் தான்.  அவருடன் ஒரு படத்திலாவது நாம் நடித்துவிட மாட்டோமா என்று நடிகைகள் பலரும் ஏக்கத்துடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  அதேபோல பல இயக்குனர்களும், நட்சத்திரங்களும் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கின்றனர்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும், படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  

sundarc

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!

விஜய்யை பற்றி பலரும் பெருமையாக கூறிவரும் நிலையில், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி-யும் கூறியிருக்கிறார்.  அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.  விஜயை பற்றி கூறியதும் உங்கள் நினைவுக்கு வரக்கூடிய விஷயம் என்னவென்று கேட்டதற்கு, பதிலளித்த சுந்தர்.சி எனக்கு லைஃப்-ல ஒரே ஃபீலிங் விஜய் சார் கூட படம் பண்ணாதது தான்.  நான் ரஜினிகாந்த் சாருடனும் பணிபுரிந்துவிட்டேன், கமல்ஹாசன் சாருடனும் பணிபுரிந்துவிட்டேன் மற்றும் அஜித் சாருடனும் பணிபுரிந்துவிட்டேன் ஆனால் இன்னும் விஜய் சாருடன் மட்டும் இன்னும் இணைந்து பணியாற்றவில்லை.  விஜய் சாருடன் மட்டும் இணைந்து பணியாற்றிவிட்டால் எனது வாழ்வு முழுமைபெறும் என்று கூறியுள்ளார்.

 

பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி மற்றும் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாம்பூச்சி’ படம் ஜூன்-24ம் தேதி வெளியாகுகிறது.  தற்போது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  அதனைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க | விஜய் படத்துக்காக பாலிவுட் வாய்ப்பை இழந்த நெல்சன் திலீப்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here