Home Sports விளையாட்டு செய்திகள் Important information regarding school reopening in Tamil Nadu | தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா; வெளியான முக்கிய தகவல்

Important information regarding school reopening in Tamil Nadu | தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா; வெளியான முக்கிய தகவல்

0
Important information regarding school reopening in Tamil Nadu | தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா; வெளியான முக்கிய தகவல்

[ad_1]

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை (Corona Virus Second Wave) கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பும் குறைந்து வருகிறது.  

கொரோனா பரவல் (Corona Virus)  காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன் லைன் மூலம் வகுப்புகள் (Online classes)  நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்து வருவதன் காரணமாக, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ள நிலையில், வகுப்பறைகளை தயார் செய்வது தொடர்பான பணிகளுக்காக அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர்.

ALSO READ | CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா..!!

தமிழகத்தில் கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,61, 587 ஆக உள்ள நிலையில்,  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,102 என்ற அளவில் உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 26 பேர் இறந்தனர். கொரோனா தொடங்கியது முதல் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,102 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,716 ஆக உள்ளது.

நான்கு மாத காலத்திற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று மீண்டும் பள்ளிக்கு பணிக்கு வந்துள்ளனர். மேலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனிப்பட்ட வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பிக்கப்பட்டு யூனிட் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ள நிலையில் வருகின்ற 6ம் தேதி வாட்ஸ்அப் மூலம், யூனிட் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here