Home தமிழ் News ஆரோக்கியம் Kamal Haasan joins Indian 2 Shooting | Indian2: செட்டுக்கு கமல் வந்தாச்சு… கதையை விளக்கிய சங்கர்

Kamal Haasan joins Indian 2 Shooting | Indian2: செட்டுக்கு கமல் வந்தாச்சு… கதையை விளக்கிய சங்கர்

0
Kamal Haasan joins Indian 2 Shooting | Indian2: செட்டுக்கு கமல் வந்தாச்சு… கதையை விளக்கிய சங்கர்

லைகா புரொடக்ஷனில் விறுவிறுப்பாக உருவாகி கைவிடப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் மீண்டும் கூடியிருக்கும் இந்தியன் 2 படக்குழு, எஞ்சிய காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் சென்னையில் சூட்டிங் தொடங்கியது. ஆனால், அந்த படப்பிடிப்பில் கதையின் நாயகனாக கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து  குஷியில் இருந்த கமல்ஹாசன், அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்க சென்றார். அங்கு அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணியாற்றிய ஹாலிவுட் புகழ் கலைஞரை சந்தித்தார். 

அப்போது இந்தியன் 2 படத்திற்கான மேக்கப் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.அவர் இந்தியா திரும்பியதும் சூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. அதன்படி அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிபிப்பில் கலந்து கொண்டார். அவருடைய சீன் குறித்து இயக்குநர் சங்கர், அவரிடம் விளக்கினார். கமல்ஹாசனைத் தொடந்து காஜல் அகர்வால் உள்ளிட்டோரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். லைகா மட்டும் தயாரித்த இப்படத்தை இப்போது ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளது. 

ஏறத்தாழ பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விருந்தாக படம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு முன்கூட்டியே வெளிவந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என சினிமா வட்டாரம் கூறுகிறது. இந்த ஒரு படத்தால் லைகா நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது. படம் வெளிவந்து ஓடினாலும், இழப்பை ஈடுகட்டுமா? என்பது இப்போதைக்கு கேள்விக்குறி. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு கல்தா – ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here