Home Sports விளையாட்டு செய்திகள் Lockdown extended for one week in Tamil Nadu know what is allowed and what is not | தமிழகத்தில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

Lockdown extended for one week in Tamil Nadu know what is allowed and what is not | தமிழகத்தில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

0

[ad_1]

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எனினும், மக்களுக்கு இதனால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது என்றும் அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு கிடைக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றும் அரசு அறிக்கை விடுத்துள்ளது. 

தமிழக அரசின் ஊரடங்கு நீட்டிப்பு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

– குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வண்டிகள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும். 

– உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

– தடுப்பூசி (Vaccine) செலுத்திக்கொள்ள செல்பவர்களுக்கு எந்த தடையும் இல்லை. உரிய ஆவணங்களை காட்டி அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

– ஆன்லைன், தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை அவர்களுக்கு வழங்கவும் உத்தரவு. 

– ஜூன் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

– தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் மீது தற்போது உள்ளது போல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

– முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ALSO READ: 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கும் பல வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த பரவலை தீவிரமாக குறைக்க தளர்வுகளற்ற  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து தொற்றை கட்டுப்படுத்த மக்கள் உதவ வெண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கூறியுள்ளார். 

ஊரடங்கு (Lockdown) தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “”கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும் ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கின் விளைவுகள் தற்போது தெரியத் தொடங்கியுள்ளன. பீதியைக் கிளப்பும் வகையில் அதிகரித்துக் கொண்டிருந்த ஒரு நாள் தொற்றின் அளவு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இந்த நிளையில், தற்போது நீட்டுக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கண்டிப்பாக தொற்று பரவலின் வேகம் குறையும். 

ALSO READ: இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டாதீர்கள், கொந்தளித்த எடப்பாடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here