Home தமிழ் News ஆரோக்கியம் Lyca Productions has spent crores on the title rights of Chandramuki 2 | இவ்வளவு கோடியை கொட்டி கொடுத்து சந்திரமுகி டைட்டில் உரிமையை வாங்கியதா லைகா?

Lyca Productions has spent crores on the title rights of Chandramuki 2 | இவ்வளவு கோடியை கொட்டி கொடுத்து சந்திரமுகி டைட்டில் உரிமையை வாங்கியதா லைகா?

0
Lyca Productions has spent crores on the title rights of Chandramuki 2 | இவ்வளவு கோடியை கொட்டி கொடுத்து சந்திரமுகி டைட்டில் உரிமையை வாங்கியதா லைகா?

[ad_1]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 600 கோடிகளுக்கும் மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது. இயக்குநர் பி.வாசு இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் பிரபு, நயன்தாரா, வடிவேலு, ஜோதிகா உள்ளிட்ட  நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ்? நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அமிதாப் கேட்ட கேள்வி வைரல்

இந்தப் படத்தின் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், படத்தின் அப்டேட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டார் இயக்குநர் பி.வாசு. சந்திரமுகி பார்ட் 2 எடுக்க தயாராக இருப்பதாக அறிவித்த அவர், கதாநாயகனாக லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறினார். மேலும், முதல் பாகத்தில் நடித்த வடிவேலு, சந்திரமுகியின் 2 ஆம் பாகத்திலும் நடிக்கிறார்.

இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி இசையமைப்பாளர் கீராவாணி இசையமைக்க இருக்கிறாராம். படத்தின் கதை தயாராக இருப்பதால் லாரன்ஸ் ஏற்கனவே கமிட்டான படங்களின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் சந்திரமுகி பார்ட் 2 படத்தை உருவாக்க இயக்குநர் பி.வாசு மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, சந்திரமுகி படத்தின் டைட்டில் உரிமையை சிவாஜி கணேசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்துள்ளது. இதனை லைகா நிறுவனம், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ராம்குமாரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த பட வேலைகள் தொடங்கப் பட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் சந்திரமுகி 2 குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | போதை மருந்து விருந்து: நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் உட்பட 5 பேர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here