Home தமிழ் News ஆரோக்கியம் Manirathnam Ponnyin Selvan Movie Planning To Reshoot | எடுத்த காட்சிகள் சரி இல்லாததால் மீண்டும் எடுக்கப்படும் பொன்னியின் செல்வன்

Manirathnam Ponnyin Selvan Movie Planning To Reshoot | எடுத்த காட்சிகள் சரி இல்லாததால் மீண்டும் எடுக்கப்படும் பொன்னியின் செல்வன்

0
Manirathnam Ponnyin Selvan Movie Planning To Reshoot | எடுத்த காட்சிகள் சரி இல்லாததால் மீண்டும் எடுக்கப்படும் பொன்னியின் செல்வன்

[ad_1]

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்பு பெருகிக்கொண்டே வருகிறது.  இந்த திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு திட்டமாகும், இப்படத்தினை இயக்குனர் சிறந்த முறையில் உருவாக்கி இருக்கிறார்.  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான பிஎஸ்-1 திரைப்படம் செப்டம்பர்-30ம் தேதி வெளியாகவிருக்கிறது.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க | தளபதி விஜய் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான் -மனம் திறந்த மாளவிகா மோகனன் !

இந்நிலையில், படத்தின் சில காட்சிகள் இயக்குனருக்கு திருப்தியளிக்கவில்லை, அதனால் அந்த காட்சிகளை இயக்குனர் மீண்டும் படம்பிடிக்க போகிறார் என்று சில செய்திகள் வெளியானது.  ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது, மேலும் இயக்குனர் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று மன நிறைவுடன் அடுத்தகட்ட வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார் என்று படைத்தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளது. கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.  ஐந்து சேப்டர்களாக இருந்த இந்த புத்தகத்தின் கதையை இரண்டு பாகங்களாக இயக்குனர் படமாக்கியுள்ளார், இவ்வளவு பெரிய கதையை சிறப்பாக முடிப்பது மிகவும் சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ள மிக பிரம்மாண்டமான படைப்பாக இப்படம் உருவெடுத்துள்ளது.  சீயான் விக்ரம், ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, நாசர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மோகன்லாலின் 12th மேன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here