Home Sports விளையாட்டு செய்திகள் More Restrictions are imposed in Kodaikanal due to Corona Virus spread | கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

More Restrictions are imposed in Kodaikanal due to Corona Virus spread | கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

0
More Restrictions are imposed in Kodaikanal due to Corona Virus spread | கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

[ad_1]

தமிழகத்தில் (Tamil Nadu) கொரானா மூன்றாம் அலை வராமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. 

கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 72 மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்று அல்லது இரண்டு முறை தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக் கொண்ட விபரத்தினை சோதனைச் சாவடிகளில் சரிபார்த்த பின்னரே இனி அனுமதிக்கப்படுவர்.  

கொடைக்கானல் வட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையன்ட் பூங்கா, குணா குகை, தூண் பாறை, பையர் மரக்காடுகள் போன்றவை ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கூக்கால் நீர்வீழ்ச்சி, வட்டக்காய் நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு மற்றும் டால்பின் மூளை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

ALSO READ | தமிழக ஊரடங்கு கட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

 

மேலும் கொடைக்கானல் வட்டத்திலுள்ள தனியார் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.  மலைப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மீதும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் நலன் கருதி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச. விசாகன் தெரிவித்துள்ளார்.

ALSO READ | “பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை” : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here