Home தமிழ் News ஆரோக்கியம் New Movies Coming Out This Week! | இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!

New Movies Coming Out This Week! | இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!

0
New Movies Coming Out This Week! | இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!

[ad_1]

மார்ச் மாதத்தில் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

– தமிழில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் “ஹே சினாமிகா” படம் இன்று (மார்ச் 3-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.  ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ், ஷியாம் பிரசாத் போன்ற பலரும் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

heysinamika

மேலும் படிக்க | KGF2 படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு..! பீஸ்ட் டிரெய்லர்?

– கிஷோர் திருமலா இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் “ஆடவல்லு மீக்கு ஜோகர்லு”.  ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் சர்வானந்த், ராஷ்மிகா, குஷ்பூ, ராதிகா சரத்குமார், ஊர்வசி, ரவி ஷங்கர் போன்ற பலரும் நடித்துள்ளனர்.  இந்த படம் மார்ச்-4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த படம் வெளியாகவுள்ள அதே தினத்தில் மற்றொரு தெலுங்கு படமான “செபாஸ்டியன் பிசி524” படமும் வெளியாகவுள்ளது.  பாலாஜி சாயப்புரெட்டி இயக்கிய இந்த படத்தில் கிரண் அப்பவரம், நுவேக்ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

AadavalluMeekuJohaarlu

– அடுத்ததாக அமல் நீரத் இயக்கி, தயாரித்துள்ள படம் மலையாள மொழித்திரைப்படம் ‘பீஷ்மபர்வம்’.  இந்த திரைப்படத்தில் மம்முட்டி, ஷாகிர், ஸ்ரீநாத் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் இன்று (மார்ச் 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.  இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் மற்றொரு மலையாள மொழி திரைப்படமான  ‘நாரதன்’ என்கிற அரசியல் கலந்த த்ரில்லர் படம் வெளியாகிவுள்ளது.  

Bheeshmaparavam

– நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்தி மொழித்திரைப்படம் ‘ஜூன்ட்’ .  இதில் அமிதாப் பச்சன், ஆகாஷ், ரிங்கு ராஜகுரு, கிஷோர் கதம், தானாஜி கல்குண்டே போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் மார்ச் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

Jhundthemovie

– மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் உருவான ஆங்கில மொழித்திரைப்படமான ‘தி பேட்மேன்’ படமும் மார்ச் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

batman

மேலும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் தான் எதற்கும் துணிந்தவன் படமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here