Home தமிழ் News ஆரோக்கியம் Pondicherry Theater Screen Gets Fire During Vikram Movie Show | உண்மையாகவே திரையை தீப்பிடிக்க வைத்த விக்ரம் படம்

Pondicherry Theater Screen Gets Fire During Vikram Movie Show | உண்மையாகவே திரையை தீப்பிடிக்க வைத்த விக்ரம் படம்

0
Pondicherry Theater Screen Gets Fire During Vikram Movie Show | உண்மையாகவே திரையை தீப்பிடிக்க வைத்த விக்ரம் படம்

[ad_1]

கமல் ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகி வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  அனைத்து திரையரங்குகளிலும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  ஏற்கனவே சில ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷுக்கு இப்படத்தின் மூலம் மென்மேலும் பேரும், புகழும் சேர்ந்துள்ளது.  

மேலும் படிக்க | மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாகும் அருண் விஜய்?

கடந்த 7-ம் தேதியன்று புதுச்சேரியிலுள்ள, காலாபேட் பகுதியில் இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு திரையரங்கில் விக்ரம் படம் ஒளிபரப்பபட்டபோது திரையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது, இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது.  இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விக்ரம் படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது மின்கசிவு காரணமாக எதிர்பாராதவிதமாக திரையில் தீப்பற்றி விட்டது என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சில தகவல்களின்படி, திரை முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து முறையான புகார் எதுவும் போலீசில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சூர்யா அறிமுகமாகும்போது தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.  ரசிகர்கள் பலருக்கும் அந்த கிளைமேக்ஸ் காட்சியை மிஸ் செய்ய மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேற தயக்கம் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சினிமாவில் சிலரின் ஆதிக்கம் இருக்கிறது… யாரை சொல்கிறார் ராதாரவி?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here