Home தமிழ் News ஆரோக்கியம் Ponniyin selvan Digital Rights Sold to This OTT Channel at this Cost | Ponniyin Selvan: கோடிகள் கொட்டி வாங்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமை; லைகா காட்டில் மழை

Ponniyin selvan Digital Rights Sold to This OTT Channel at this Cost | Ponniyin Selvan: கோடிகள் கொட்டி வாங்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமை; லைகா காட்டில் மழை

0
Ponniyin selvan Digital Rights Sold to This OTT Channel at this Cost | Ponniyin Selvan: கோடிகள் கொட்டி வாங்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமை; லைகா காட்டில் மழை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. 5 மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படம், தமிழ் நிலம் மட்டுமல்லாது கண்டம் கடந்து ஆண்ட சோழர்களின் பெரும் வரலாற்றையும் வீரத்தையும் பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்கியின் நாவலின் அடிப்படையில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம், இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இணையாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் திரைப்படம் – முடிந்தது வியாபாரம்… முழு விவரம்

நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும், ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியாகியிருக்கும் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. தற்போது படத்தின் ரிலீஸூக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் பின்னணி இசையமைப்பு உள்ளிட்ட பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நிலையில், படத்தின் விற்பனையும் தொடங்கியிருக்கிறது. 

வெளிநாடுகளைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனமும்,  கனடாவில் KW டாக்கீஸ் மற்றும் Night ED Films நிறுவனமும் வெளியிடுகின்றன. ஐரோப்பாவில் போலின் நிறுவனமும் வெளியிடுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் PHF நிறுவனமும்ம் மலேசியாவில் லோட்டஸ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. சிங்கப்பூரில் ஹோம் ஸ்க்ரீன் நிறுவனத்தினர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட உள்ளனர். 

உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனையையும் லைகா நிறுவனம் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, முன்னணி டிஜிட்டல் நிறுவனமான அமேசான் நிறுவனம் ஏறத்தாழ 125 கோடி ரூபாய் கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தை வாங்கியிருக்கிறதாம். சாட்டிலைட் விற்பனைக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், முன்னணி சேனல்கள் மூன்று முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனவாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | வசூலை அள்ளும் தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்த படம் – ரசிகர்கள் உற்சாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here