Home தமிழ் News ஆரோக்கியம் Ponniyin Selvan teaser to be launched in july at Thanjavur | தஞ்சை தரணியில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் – மாஸ் அப்டேட்

Ponniyin Selvan teaser to be launched in july at Thanjavur | தஞ்சை தரணியில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் – மாஸ் அப்டேட்

0
Ponniyin Selvan teaser to be launched in july at Thanjavur | தஞ்சை தரணியில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் – மாஸ் அப்டேட்

[ad_1]

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 30  ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், மற்ற அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்போது படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | நயன்தாரா திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளாதது ஏன்?

அடுத்த மாதம் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, தஞ்சை மண்ணில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. நாவலின் கதைக்களம் தஞ்சை என்பதால் அங்கேயே பிரம்மாண்ட செட் அமைத்து வெகுசிறப்பாக வெளியிட இயக்குநர் மணிரத்னம் முடிவெடுத்துள்ளாராம். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் மைல் கல்லாக பார்க்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இந்திய சினிமாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

அண்மையில் ரிலீஸாகி வசூலில் சாம்ராஜ்ஜியம் படைத்திருக்கும் ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் 2 படங்களைவிட தரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சோழ ராஜவம்சத்தை எழுத்திலேயே பிரமாண்டத்தை கட்டி எழுப்பியிருப்பார் கல்கி. அந்த நாவலை படிக்கும்போது சோழர்களின் பிரம்மாண்டமும், அவர்களின் படை மற்றும் கலாச்சாரம் அனைத்தும் மனக்கண்ணில் ஓடும். அத்தகைய பொன்னியின் செல்வன் நாவல், திரைமொழியில் எப்படி இருக்கும்? என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு. அதனை மணிரத்னம் திறம்பட செய்திருப்பார் என பெரும் நம்பிக்கையில் தமிழ் மக்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | நயன் – விக்கி திருமணத்தை கவுதம் மேனன் இயக்குவது உண்மையா?

இந்தப் படத்தில் கார்த்திக், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூலையில் டீசர் வெளியிடப்பட்டவுடன், பட புரோமோஷனுக்காக உலகம் முழுவதும் திரைகுழுவினர் சுற்றுலா செல்லவும் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here