Home தமிழ் News ஆரோக்கியம் Rajini sir want to see my movie! thezn movie actor made the request!

Rajini sir want to see my movie! thezn movie actor made the request!

0
Rajini sir want to see my movie! thezn movie actor made the request!

[ad_1]

கடந்த மார்ச் மாதத்தில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தமிழில் வெளியான படம் ‘தேன்’.  இப்படத்தில் கதாநாயகனாக தருண் குமாரும், கதாநாயகியாக எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி நடித்திருந்தார்.  மேலும் இந்த திரைப்படத்தில் துணை நடிகர்களாக அருள்தாஸ், பாவா லட்சுமணன், அனுசிறீ ஆகியோர் நடித்துள்ளனர்.

ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!

தேனீ வளர்க்கும் பாமர இளைஞன் ஒருவனின் மனைவிக்கு ஏற்படும் ஒரு அரியவகை நோயை கண்டறிந்து அந்த இளைஞன் அதிலிருந்து மனைவியை மீட்க எவ்வளவு சவால்களை எதிகொள்கிறான் என்பது தான் இப்படத்தின் கரு.  மேலும் கோவாவில் நடைபெற்ற இந்தியன் பனோரமா 2020 நிகழ்ச்சியில் அசுரன் படத்துடன் இணைந்து திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் என்றால் அது ‘தேன்’ தான்.  இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.

thezn

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.  ‘அண்ணாத்தே’ படத்திற்கு பின் ஓய்வில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் பல படங்களை பார்த்து விட்டு சம்மந்தப்பட்ட அந்த படக்குழுவினரை மனமகிழ்ந்து பாராட்டி வருகிறார்.  சமீபத்தில் வெளியான ஜெய் பீம், மாநாடு, ராக்கி மற்றும் 83 போன்ற படங்களை பார்த்துவிட்டு பாராட்டினார்.  தற்போது நடிகர் தருண் அவர் நடித்த ‘தேன்’ படத்தை ரஜினிகாந்த் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அதன்படி அவர்  ட்விட்டரில், “ரஜினிகாந்த் சார் நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது என் படத்தை பார்க்க வேண்டும்.  நான் நடித்தான் ‘தேன்’ படம் 2021 மார்ச் மாதம்-19ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசானது.  நாங்கள் இந்த படத்தை உங்களுக்கு காட்ட நிறைய முயற்சி செய்துள்ளோம்.  மேலும் ‘தேன்’ படம் சோனிலிவ் OTT  தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ | குக் வித் கோமாளி-3 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here