Home தமிழ் News ஆரோக்கியம் Rashmika Mandanna Dance For Beast Arabic Kuthu Song | அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா வைரலாகும் வீடியோ

Rashmika Mandanna Dance For Beast Arabic Kuthu Song | அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா வைரலாகும் வீடியோ

0
Rashmika Mandanna Dance For Beast Arabic Kuthu Song | அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா வைரலாகும் வீடியோ

[ad_1]

விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடி உள்ளார்.  நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இருந்து இதுவரை வெறும் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், கடந்த மாதம் காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்திலிருந்து முதல் பாடலான அரபிக் குத்து வெளியானது.  இந்த பாடலை அனிருத் இசையமைக்க, சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். இப்பாடல் வெளியானதிலிருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. 

 

மேலும் படிக்க | தளபதி 66-ல் விஜயுடன் ஜோடி சேரும் புஷ்பா ஹீரோயின்?

திரும்பும் திசை எங்கும் அரபிக் குத்து கேட்டுக்கொண்டிருக்க இந்த வீடியோ யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலுக்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர். கீர்த்தி சுரேஷ், சமந்தாவின் அரம்பிக்குத்து ரீல்ஸ் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது மற்றொரு டாப் நடிகையான ராஷ்மிகா மந்தனா அரபிக் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் அரபிக் குத்துப்பாடலுக்கு ராஷ்மிகா நடனமாடி பதிவேற்றியுள்ளார்.  

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ ஆடியோ ரிலீஸ்: ரசிகர்களுக்கு 3 சர்ப்ரைஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here