Home தமிழ் News ஆரோக்கியம் tamil film producers council request to give film review after 3 days of its review | 3 நாள்கள் கழித்துதான் ரிவ்யூ தயாரிப்பாளர் சங்கம் போட்ட தீர்மானம் கடுப்பில் யூட்யூபர்கள்

tamil film producers council request to give film review after 3 days of its review | 3 நாள்கள் கழித்துதான் ரிவ்யூ தயாரிப்பாளர் சங்கம் போட்ட தீர்மானம் கடுப்பில் யூட்யூபர்கள்

0
tamil film producers council request to give film review after 3 days of its review | 3 நாள்கள் கழித்துதான் ரிவ்யூ தயாரிப்பாளர் சங்கம் போட்ட தீர்மானம் கடுப்பில் யூட்யூபர்கள்

தமிழ்த் திரைப்டத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (செப். 18) காலை நடைபெற்றது. சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையிலும், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலையிலும் பொதுக்குழு நடைபெற்றது. 

பொதுக்குழுவில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானதாக, திரைப்பட விமர்சனங்களை, அதன் வெளியீட்டு தேதியில் இருந்து மூன்று நாள்கள் கழித்து வெளியிடும் வேண்டும் என போடப்பட்ட தீர்மானம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அதாவது,’திரைப்படம் வெளியான தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, சமூக வலைதளங்களில் அதன் விமர்சனங்களை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை திரையுலகில் நீண்ட நாள்களாக வைக்கப்பட்ட வந்த கோரிக்கைதான். யூட்யூப் ரிவ்யூகள், பேஸ்புக் போஸ்ட்கள், ட்விட்டர் மீம்கள் மூலம் பட குறித்த விமர்சனங்கள் நொடிக்கு நொடி வெளியாகிறது. இதனால், பல திரைப்படங்கள் வணிக ரீதியாக படுதோல்வியடைகிறது என கருத்தும் நிலவிவருகிறது. 

மேலும், திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாவதால்,ஞாயிற்றுகிழமைகளுக்கு பிறகு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியானால், அது படத்தின் வசூலை பாதிக்காது எனவும் கூறப்படுகிறது. எனவே, தான் மூன்று நாள்களுக்கு பின் விமர்சனங்களை வெளியட தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி, தியேட்டரில் கேமாராக்களை கொண்டு வந்து பார்வையாளர்களிடம் பேட்டி எடுப்பது குறித்தும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதில்,’திரையரங்குகளில் படம்பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கொண்டுவரும் கேமராக்களை திரையரங்குகளின் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறது’ என குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானம் குறிப்பாக யூட்யூப் சேனல்களின் பேட்டிகளுக்கு எதிரான வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

திரைப்படங்களையும், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறூாக பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்தவித பேட்டிகள் தருவதை திரைத்திறையினர் தவிர்க்குமாறும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனை இவ்வளவு நாள் எடுக்காமல் இருந்தது நல்லதுதான் – மணிரத்னம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here