Home Sports விளையாட்டு செய்திகள் TN School reopening: Minister Anbil Mahesh gives this important information on school reopening | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை: அன்பில் மகேஷ்

TN School reopening: Minister Anbil Mahesh gives this important information on school reopening | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை: அன்பில் மகேஷ்

0
TN School reopening: Minister Anbil Mahesh gives this important information on school reopening | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை: அன்பில் மகேஷ்

[ad_1]

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இதற்கான கோரிக்கையை முதலமைச்சரிடம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தின் போது வைப்போம் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

இந்தியத் திருநாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி பாரத சாரண சாரணியர் தமிழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) பொய்யாமொழி தேசிய கொடியேற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 12 தேசிய விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதோடு 50 ஆண்டுகளுக்கும் மேல் பாரத சாரண சாரணிய இயக்கத்தில் பணியாற்றுவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ந.முத்துகிருஷ்ணன் என்பவர்களுக்கும் கே.அலமேலு என்பவருக்கும் வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துரை பற்றிய கேள்விக்கு, நீட்-டை நியாயப்படுத்தும் விதமாக தான் ஆரம்பத்திலிருந்து ஆளுநர் பேசி வருகிறார். ஆனால் நீட் (NEET) வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஆளுநர் உடனடியாக நீட் மசோதாவை அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கைஎன்று கூறினார்.

ALSO READ | உண்ணாவிரத போராட்டத்தின் இடையே பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை

அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:

– அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முனைப்புடன் உள்ளோம். அதை படிப்படியாக செய்வோம்.

– இரு மொழி கொள்கை தான் நம் கொள்கை. அதில் என்றும் பின் வாங்க மாட்டோம். 

– 10,11,12 ஆகிய வகுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம். அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

– பொதுத் தேர்வுக்கு முன்பு இரண்டு ரிவிஷன் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு ரிவிஷன் தேர்வு மட்டுமே நடைபெறும்.

– பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா தாள் வடிவமைப்பு முறையில் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கு முன்பு பொதுத்தேர்வுகளின் கேள்வித்தாள் எப்படி இருந்ததோ அப்படியே இந்த ஆண்டும் பொதுத் தேர்வும் நடைபெறும்..

– அரசு பள்ளிகளில் 3,330 பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது – உயர்நீதிமன்றம்!



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here