Home தமிழ் News ஆரோக்கியம் Yaanai Movie Release Postponed Again

Yaanai Movie Release Postponed Again

0
Yaanai Movie Release Postponed Again

[ad_1]

முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஹரி. இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் ஹிட் அடித்தவை. இவர் தற்போது நடிகரும், தனது உறவினருமான அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.மேலும் வழக்கமான ஹரி படங்கள் போல் இருந்தாலும் இப்படத்தின் மேக்கிங்கில் சற்று வித்தியாசம் தெரிவதாக ரசிகர்கள் கூறினர்.

Hari

இதற்கிடையே நீண்ட நாள்களாக ரிலீஸுக்கு காத்திருந்த யானை படம் முதலில் மே 6ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளால் படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் மீண்டும் யானை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. யானை படமானது தமிழகத்தில் 13 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலையும் குவித்துவருகிறது.

மேலும் படிக்க | தனுஷை தொடர்ந்து 21 வயது இளைஞராக நடிக்கும் சிம்பு!

இந்தச் சமயத்தில் யானை படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றியதாக கூறப்படுகிறது. படம் எப்போது ரிலீஸ் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் .

 

அதேசமயம், ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமான வீட்ல விசேஷம் ஜூன் 17ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here