Home தமிழ் News ஆரோக்கியம் Meera Mithun – Judge dismisses case chennai highcourt | சூப்பர் மாடல் மீரா மிதுன் வழக்கு – முடித்து வைத்த நீதிமன்றம் !

Meera Mithun – Judge dismisses case chennai highcourt | சூப்பர் மாடல் மீரா மிதுன் வழக்கு – முடித்து வைத்த நீதிமன்றம் !

0
Meera Mithun – Judge dismisses case chennai highcourt | சூப்பர் மாடல் மீரா மிதுன் வழக்கு – முடித்து வைத்த நீதிமன்றம் !

[ad_1]

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய  நடிகை மீராமிதுன் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் மீரா மிதுன் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

meera mithun,model,highcourt,meera,cinema,மீரா மிதுன்

அதில் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மீரா மிதுன்,அவரது நண்பர் ஷாம் அபிஷேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. 

meera mithun,model,highcourt,meera,cinema,மீரா மிதுன்

அப்போது, மனுதாரர் தரப்பில் பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை எனவும், நடிகை மீரா மிதுன் பேசும்போது அருகில் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் பேசுவதை  ஆதரித்ததுடன் அவர் பேசுவதற்கு உறுதுணையாக அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | திருப்பதிக்கு அடுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் சென்ற இடம் எங்கேனு தெரியுமா?!

இதையடுத்து நீதிபதி, நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும் எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என கருத்து தெரிவித்தார்.பின் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, அதற்கு அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | தனது குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலில் பகிர்ந்த காஜல் அகர்வால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here