Home தமிழ் News ஆரோக்கியம் Pushkar Gayathiri May Direct Ajithkumar AK 63 Movie | ஏகே 63 திரைப்படத்தை இயக்கப்போவது இவர்களா?

Pushkar Gayathiri May Direct Ajithkumar AK 63 Movie | ஏகே 63 திரைப்படத்தை இயக்கப்போவது இவர்களா?

0
Pushkar Gayathiri May Direct Ajithkumar AK 63 Movie | ஏகே 63 திரைப்படத்தை இயக்கப்போவது இவர்களா?

வலிமை கூட்டணியில் நடிகர் அஜித் ஏகே 61 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹெச். வினோத்துடன் தொடர்ச்சியாக 3வது திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் அவர், அடுத்த படத்தில் விக்னேஷ் சிவனுடன் கரம்கோர்க்க இருக்கிறார். ஏகே 61 திரைப்படம் ஒரு பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் என கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்புகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்த அஜித், திடீரென ஐரோப்பிய டூர் கிளம்பினார். இங்கிலாந்து மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பைக் ரைடிங் சென்றார். அந்த டூரை மகிழ்ச்சிகரமாக நிறைவு செய்த அவர், தற்போது மீண்டும் இந்தியா திரும்பி ஏகே 61 சூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் ரிலீஸை மனதில் வைத்து தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால், இரண்டு பெரிய ஸ்டார்களின் படமும் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஏகே 61 படத்தின் படப்பிடிப்புகள் புனேவில் பிரம்மாண்ட செட் அமைத்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். அந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பிஜிஎம் சர்ச்சையில் யுவன் சங்கர் ராஜா! மாஸ்டர் காபியா?

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்? என்பது தான் கோலிவுட் கேள்வியாக இருக்கிறது. அஜித்துகாக பலரும் கதை வைத்திருக்கின்றனர். 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீகணேஷ், சுதா கொங்கரா, புஷ்கர் காயத்திரி உள்ளிட்டோரும் அஜித்துக்காக கதை வைத்திருக்கும் நிலையில், இதில் சிலர் அஜித்திடம் கதையையும் கூறியுள்ளனர். அதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் ஒரு பெயர் முன்னணியில் அடிபடுகிறது. விக்ரம் வேதா படத்தை இந்தியில் இயக்கி முடித்திருக்கும் புஷ்கர் காயத்திரி, அடுத்து அஜித்துடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. விக்ரம் வேதா போன்று வெயிட்டான சப்ஜெக்டாம். இருப்பினும், விக்னேஷ் சிவன் படத்தின் பணிகள் தொடங்கிய பிறகே ஏகே 63 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. 

மேலும் படிக்க | கார்த்தி நடித்துள்ள விருமன் படம் எப்படி இருக்கு? விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here