Home சினிமா செய்திகள் The family man fame manoj bajbai meet vijay sethupathi – தமிழ் News

The family man fame manoj bajbai meet vijay sethupathi – தமிழ் News

0
The family man fame manoj bajbai meet vijay sethupathi – தமிழ் News

[ad_1]

தேசிய விருது பெற்ற நண்பர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என ’தி ஃபேமிலிமேன்’ என்ற தொடரில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த 67 வது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற விஜய்சேதுபதியை நடிகர் மனோஜ் பாஜ்பாய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த மனோஜ் பாஜ்பாய், ‘என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவரான விஜய் சேதுபதியை தேசிய விருது வழங்கும் விழாவின் போது சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும், ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவருடைய நடிப்பு மிக அபாரமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் பாஜ்பாய் நடித்த ’தி ஃபேமிலிமேன்’ தொடரின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கும் அடுத்த தொடரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here